பக்கம்:தரும தீபிகை 5.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1578 த ரும தி பி ைக பிறர்க்கு இடர்புரிவது பாவமாய்த் துன்பமே கருதலால் அதனை விலகியபோது புண்ணியமும் இன்பமும் பொருந்தி வருகின்றன. நல்ல செயல்கள் நலங்கள் பல தருகின்றன. கோடிக் கணக்கான நூல்கள் போதித்துள்ள போதனை களையெல்லாம் ந - ன் அரைச்சுலோகத்தில் சொல்லுகிறேன் என்று வடமொழியில் ஒரு பெரியவர் கூறியுள்ளார். அவ்வாறு அவர் உயர்வாகக் கூறியது அயலே வருகின்றது. "சுலோகார்த்தோ ப்ரவகஷ்யாமி யதுக்தம் க்ரந்தகோடிஷ பரோபகார: புண்யாய பாபாய பரபீட கம். ' கோடானுகோடி நூல்களில் கூறியுள்ள நீதிகளையெல் அதாவது பிறர்க்கு இகம் புரிவது புண்ணியம்; இடர் செய்வது பாவம் என்பதேயாம்' என்னும் இது இங்கே அறிய வுரியது. புண்ணியம் இன்னது பாவம் இது என்பதை ஈண்டுத்தெளி வாக உணர்ந்து கொள்ளுகிருேம். இனியராய் இதம் புரிபவர் புண்ணியவான்களாய் உயர்ந்து திகழ்கின்ருர்; கொடியராய் இடர் செய்வர் பாவிகளாய் இழிந்து பழி யடைகின்றனர். பிறர்க்குக் காம் புரிகிற கொடுமைகள் தமக்கு இம்மையும் மறுமையும் துயரங்களைவிளேத்து வருதலைச் சிறிதேனும் உணர்ந்து சிந்திப்பின் எவரும் யார்க்கும் இடர் செய்ய நேரார். அறியாக மூடத்தால் அவகேடுகளைப் பழகி அநியாயமாய் அழிந்து போ கின்ருர். உறுவதை உணராமல் ஊனம் புரிவது ஈனமாகின்றது. புன் தொழிலே தம் தொழில். என்றது புலையான புல்லரின் செயல்களை உணர்த்திகின்றது. மேலோர் வெறுத்து விலகும் கொடுமைகளை விரும்பிச் செய்பவர் ேேழாராயிழிந்து நரகதுயரங்களுக்கு ஆளாகின்றனர். அவரோடு பழகினும் பழியாம் ஆதலால் விழிகானது விலகிவிடவேண்டும். "உனும் சுவை அமுதையும் உயர்வொழித்திடும் பிணம்படும் உடம்பினேப் பேணித் தித்தொழில் இணங்குபு திரிதரும் இழுதை மாந்தரைப் பணிந்திடின் மக்களில் பதடி என்பரால்.” (சீகாளத்திப் புராணம்.)

  • - :
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/39&oldid=1326596" இலிருந்து மீள்விக்கப்பட்டது