பக்கம்:தரும தீபிகை 5.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67. கொ டு ைம 1579 இழிதொழிலாளரோடு கூடலாகாது; கூடின் .ெ க ச டி ய இழிவாம் என இது குறித்துள்ளது. இனிமை புரிந்து உயராமல் கொடுமை புரிந்து கெடுவது அமுதை உண்ணுமல் நஞ்சை அருந்தி அழிக்கபடியாம். உண்மை தெளிந்து உய்தி கானுக. 667. காட்டு விலங்குள் கரடி புலிகொடிய நாட்டுட் கொடியர் நவையூறக்-கூட்டியின்று வட்டிக்குப் பொன்கொடுப்போர் வஞ்சமுடன் கோளுரைப்போர் ஒட்டல் ஒழிக. வுடன். -- - - (எ) காட்டில் திரியும் மிருகங்களுள் காடியும் புலியும் கொடியன; நாட்டில் வாழும் மக்களுள் வட்டி யாளரும் வஞ்சக்கோளரும் கொடியவர்; ஆகவே அவரை அணுகாமல் அகன்று வாழுக. இது விழுமிய வாழ்வை விழி தெரிய விளக்கியது. கூட்டம் கூட்டமாய்க் கூடிவாழும் இயல்புகள் மக்களிட மும் மாக்களிடமும் ஒக்க மருவியுள்ளன. சீவப்பிராணிகளுடைய சீவிய முறைகள் பலவாறு பிரிந்திருக்கின்றன. நாடு காடு என் னும்மொழிகள் பாடு படிந்து வந்துள்ளன. மக்கள் கூட்டமாப் உயர்ந்த கேட்டங்களை விரும்பித் தம் வாழ்க்கைகளை நாடி நடத் தும் நிலப்பகுதி நாடு என வந்தது. அந்த நாட்டம் கடந்துள்ள இடம் காடுகள் என நின்றது. மனித சஞ்சாரம் இல்லாத காட்டில் மிருகங்கள் கூட்ட மாயிருக்கின்றன. அந்த மிருக இனங்களில் புலியும் கரடியும் கொடிய இயல்பின. பிற உயிர்களுக்கு அல்லலான செயல்களைத் தாம் இயல்பாக வுடைமையால் அவை கொடிய மிருகங்கள் என செடிய பேர் பெற்றன. அந்தக்காட்டு மிருகங்களை இங்கனம் குறித்துக்காட்டியது நாட்டு மிருகங்களைக் கூர்ந்து காணவந்தது. உருவநிலையில் மனி தராய்த் தோன்றியிருந்தாலும் குணம் செயல்களில் கொடியரா யுள்ளவர் மிருகங்களாகவே கருதப்படுகின்றனர். நல்ல நீர்மைகள் குன்றியபொழுது மனிதரும் பொல்லாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/40&oldid=1326597" இலிருந்து மீள்விக்கப்பட்டது