பக்கம்:தரும தீபிகை 5.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1580 தரும தீ பி. கை விலங்குகளாய்ப் பொங்கி எழுகின்ருர். உள்ளம் கொடுமை யாகவே கடுமையானகேடுகளைச் செய்ய நேர்கின்ருர். நேரவே கடுவாப் புலிகளைப்போல் அவர் அஞ்சத்தக்கவ ராகின்ருர். புல்வாப் பசு முதலிய மெல்லிய பிராணிகளைப் புலி அடித் துத் தின்னும்; அதுபோல் யாண்டும் அல்லலே செய்து பிழைப் பவர் பொல்லாத மிருகங்கள் என்று சொல்ல நேர்ந்தார். கோள் கூறும் கொடியவர் மனித சமுதாயத்துள் பெருங் கேடுகளை ஒருங்கே செய்துவிடுவர் ஆதலால் அவர் பாம்பினும் தீம்பினர்; பேயினும் தீயவர்; புலியினும் கொடியவராவர். வாள்செய்யாத கொலையைக் கோள் செய்யும். என்னும் பழமொழியால் கோளரது பழிபாகங்களைத்தெளி வாக உணர்ந்து கொள்ளலாம். கூனி கூறிய ஒரு கோளுரையால் அரிய பல அரச செல்வங்களை இழந்து காடு புகுந்து இராமன் கடுந்துயர் உழந்தது காவியமாய் வந்துள்ளது. காதில் ஒதிக்கடுங் கேடுகள் புரியும் காதகர் கொடியபாதகர் ஆதலால் அவரை அருகே அனுக விடுவது பெரிய அபாயமாம். "தீயன் எனும் பாம்பு செவியில் ஒரு வற்கவ்வ மாயுமே மற்றை யவன்.' கோளன் செய்யும் கொலைபாககத்தை இது குறித்திருக் கிறது. இவ்வாறு கொடுங் தீமைகளைச் செய்து வருதலால் கோளன் வாழ்வு கடும்பாதகமாய் முடிந்து நிற்கிறது. புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் அறங்கூறும் ஆக்கம் தரும். (குறள் 183.) கோளன் உயிர்வாழ்ந்திருப்பதைவிடச் செத்துப்போவது நல்லது என்று தேவர் இங்கனம் குறித்திருக்கிருர் விரைவில் இறந்து போனல் புறங்கூறும் பாவம் அதிகமாய் அவனைச் சேராது. பாவத் துயரிலிருந்து அவனே விடுதலை செய்தலால் அந்தச் சாவு அவனுக்கு அறமும் ஆக்கமுமாப் அமைந்தது. கோள் உரைப்பது எவ்வளவு கொடுமை என்பதை இதல்ை ஒர்ந்து உணர்ந்துகொள்ளுகிருேம். வட்டிக்குப் பொன் கொடுப்போர். கொடிய இனத்தை இது இங்வனம் சுட்டிக்காட்டியுள்ளது:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/41&oldid=1326598" இலிருந்து மீள்விக்கப்பட்டது