பக்கம்:தரும தீபிகை 5.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1582 த ரும தீபிகை 'பொருளை வட்டிக்குக் கொடுப்பதாலேயே எல்லாத் ைேம களும் முக்கியமாய்ச் செய்யப் படுகின்றன” என ரஸ்கின் என்னும் ஆங்கில அறிஞர் இங்கனம் கூறியிருக்கிரு.ர். வட்டிக்குக் கடன் வாங்கிய குடிகள் பல அடியோடு அழிந்து போயுள்ளன. வெளியே கடன் கொண்டான் உள்ளே விடம் கொண்டான்' என்னும் முதுமொழியால் அதன் கொடுங் கேடுகளைக் கூர்ந்து ஒர்ந்து உணர்ந்து கொள்ளலாம். "நேர்ந்தஒரு சிறுகடல்ை கிலேத்திருந்த கிலங்களொடு வளங்கள் யாவும் ஆர்ந்தகரை யான்படிந்த அணிமரம்போல் அடியோடும் அழிந்த அந்தோ! சார்ந்தகடன் புகுந்தஅன்றே சனியன்வந்து புகுந்ததெனச் சலமே கண்டேன் கூர்ந்தகுடி கெடுத்துயிரைக் குடித்தகொடும் பேயெனவே கொண்டேன் அம்மா!' செல்வவளங்களால் ஓங்கியிருந்த தன் உயர் குடி வாங்கிய ஒரு சிறு கடல்ை நிலைகுலைந்து இழிந்து அழிந்து போன நிலையை ஒரு கடனளி இப்படிக் கடுந்துயரோடு கதறிக் கூறியிருக்கிருன். வட்டி ஈட்டம் இவ்வாறு கேடு படிந்து வருதலால் அது கொடுமை என வந்தது. வட்டித் தொழில் புரிய உதவியாய் கின்றவரும் கொடுமையாளர் என வந்தார். 'வட்டிக்குப் பணம் கொடுப்போனும், அகனே வாங்கு வோனும், அதன் சம்பந்தமான பத்திரங்களை எழுதுவோனும், அதற்குச் சாட்சியாயிருப்போலும் ஆகிய எல்லோரும் ஒரே விதமான குற்றத்தையே செய்கிருர்கள்” (நபி, 428) என மகமது நபி அரபி பாஷையில் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். மனித சமுதாயத்திற்கே இடரிழைத்து வருவதால் வட்டித் தொழில் கெட்டது என்று பெரியோர்களால் இப்படித் திட்டப் பட்டது. சுட்டி இகழ்ந்துள்ள குறிப்புகள் உய்த்துணர வுரியன. காட்டில் வாழும் கரடி ஒரு புற்றில் போப் வாய் வைத் தால் அதில் உள்ளவற்றை யெல்லாம் உறிஞ்சிவிடும்; அது போல் வட்டியாளனும் ஒரு குடியில் கைவைத்தால் அதனை அடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/43&oldid=1326600" இலிருந்து மீள்விக்கப்பட்டது