பக்கம்:தரும தீபிகை 5.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67. கொடுமை 1583 யோடு தடவி விடுவன்; ஆதலால் கரடியோடு இனமாய் ஈண்டு அவன் எண்ண நேர்ந்தான். ஒட்டல் ஒழிக. என்றது இந்தப் பட்டிகளோடு ஒட்டிப்பழகாதே எனத் தெளிவாக வலியுறுத்தியது. இனம் கீதால்ை மனம் திதாம்என்க. கோளும் வட்டியும் நாளும் கெட்டது. அந்தப் பாழ் வழி யார்ோடு பழகாதே; பழகின் வாழ்வு பழுதாம். கொடுமை கடிந்து கொடியாரை ஒதுங்கி இனியனுப் உயர்ந்து யாண்டும் இதமா ஒழுகுக. புனித வாழ்வு புண்ணியமாய் மிளிர்கிறது. 668. தாயின்பால் உண்ணத் தவித்துப் பசுங்கன்று வாயின் முலேவைக்க வாய்க்காமல்-நோயாகப் பற்றி இழுக்கும் படுகொடுமை இங்காட்டில் முற்றி யுளதே முனைந்து. )ع( இ-ள் ** தன்னை ஈன்ற தாயின் பாலை உண்ண அவாவிப் பசுவின் கன்று முலைத்தலையில் வாய் வைக்கு முன்னமே அதனைப் புலை யாப்ப் பற்றி இழுத்து அயல் ஒதுக்கும் படுகொடுமை இக் காட் டில் இங்காள் முற்றியுளது என்பதாம். பரிதாபமான கொடுமைகள் பல அறியாமையால் வளர்ந்து வருகின்றன. அறிந்து இரங்கி கல்லகை நாடிச் செய்யும் பெருந் தன்மையை மனித சமுதாயம் இழந்து வருவதால் இழிந்த நிலை களில் அழுந்தி யாண்டும் ஈனமா யுழல்கின்றது. இரங்கியருளும் நீர்மை உயர்ந்த நிலைகளில் உயர்த்தியருளு கின்றது; அந்த உண்மையை உணர்ந்து கொள்ளாமையால் இரக்கமற்ற கொடுமைகளில் பழகி மனிதன் இழிந்து அழிகிருன். கனது சுயநலமும் ஆசையும் பெருகப் பெருக அயலாரு டைய சுக துக்கங்களை யாதும் கருதாமல் மயல்மிகுந்து மனிதன் கொடுமைகளைச் செய்ய நேர்கின்ருன். கனக்கு எவ்வழியும் இனிமையாய் இதங்களேயே செய்து வருகிற செவ்விய நல்லா ரிடமும் வெவ்வினைகளை விழைந்து செய்வது நன்றி கொன்ற பாதகமாப் மனிதனுக்கு என்றும் இடும்பை கருகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/44&oldid=1326601" இலிருந்து மீள்விக்கப்பட்டது