பக்கம்:தரும தீபிகை 5.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1584 த ரும தீ பி. கை மனித சமுதாயத்துக்கு மாடுகள் செய்துவரும் உதவி அள விடலரியது. உழவு முதலிய தொழில்களைச் செய்து பயிர்களை விளைத்து உயிர்களை வளர்த்து வருகிற அவற்றின் உபகார நிலை களே உணருக்தோறும் எவரும் உள்ளம் உருகுவர். அத்தகைய இனத்தைப் பரிந்து பேணிவரின் நாட்டிற்குப் பெரிய பயன்கள் விளைந்து வரும். பேணுதுவிடின் பெருங்கேடுகளாம். காளைகள் இளங்கன்றுகளாயுள்ள பொழுது காயின் பாலை அவற்றிற்கு நன்கு ஊட்டி வர வேண்டும். அவ்வாறு உண்டு வரின் அவை செழித்து வளர்ந்து எவ்வழியும் உறுதியாய் உழைத்து வரும். 'பீரம் பேணி பாரம் தாங்கும்' என்ருர் ஒளவையார். பீரம்=தாய்ப்பால். பாரம் தாங்கும் என்ற குறிப்பால் மனிதனேக் காட்டிலும் மாட்டுக்கு முலைப் பால் எவ்வளவு உரியது என்பது இனிது தெளிவாம். இங்கனம் தனி உரிமையாயுள்ள பாலை உரிய கன்றுக்குப் பெரிதும் ஊட்டி மீதம் உள்ளதையே மனிதன் உண்ண உரியவன். அவ்வாறு செய்யாமல் கன்று மறுகி ஏங்கி நிற்கப் பாலை முழுதும் கறந்து கொள்வது கொடிய பழியாம், நெடிய பாவமாம். முலைப்பாலை விலைப்பால் ஆக்கித் தலைப்பாலாகப் பணத்தை யிட்ட நேர்ந்தவர் கொடிய கொலைப் பாலராய் நெடிய பாவங் களே ஈட்டி நேரே நாட்டுக்குக் கேடுகளை விளைத்து கிற்கின்ருர். "கன்று உயிர் ஒய்ந்துகக் கறந்து பால் உண்டோன், மன்றிடைப் பிறர்பொருள் மறைத்து வவ்வினேன்; நன்றியை மறந்திடும் நயமில் நாவினேன்; என்றிவர் உறுநரகு என்ன தாகவே." (இராம, பள்ளியடை, 104) பரதன் இவ்வாறு கூறி யிருக்கிருன். தனது அண்ணனை இராமனுக்கு அனுவளவேனும் துரோகம் எண்ணி யிருக்கால் இன்னவாறு பாவிகள் அடையும் கொடிய நரகத்தை நான் உறுவேகை என்று இக் குலமகன் குறித்துள்ளான். இதில் தலைமையாக உரைத்திருக்கலை ஊன்றி உணர வேண்டும். கன்று உயிர் ஓய்ந்து உகக் கறந்துப்ால் உண்பது எவ்வளவு கொடிய பாவம் என்பதை இதல்ை ஒர்ந்து உணர்ந்து கொள்ளுகிருேம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/45&oldid=1326602" இலிருந்து மீள்விக்கப்பட்டது