பக்கம்:தரும தீபிகை 5.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67. கொடுமை 1585 தன் காப்ப்பாலே இழந்து இறந்து போன கன்றின் கோலை உரித்து அதனுள் வைக்கோலைப் பொதிந்து உயிருள்ள கன்று போல் காட்டிப் பகக்களிடம் வஞ்சமாய்க் கறக்கும் வன் கொடுமைகள் எங்கும் மண்டியுள்ளன. நாமும் நேரே கண்டு கெஞ்சம் வருந்துகின்ருேம். இந்தக் கள்ளக் கறப்பும் உள்ளக் கொடுமையும் கல்லோர் கண்களை வருத்தி வருகின்றன. அருளு டையவர் அல்லல்களை நோக்கி அலமருகின்றனர். "தோல்கன்று காட்டிக் கறவார்; கறந்தபால் -- பாற்பட்டார் உண்ணுர் பழிபாவம்' (சிறுபஞ்சமூலம், 84) * தோலால் செய்த கன்றைக் காட்டிப் பாலைக் கறப்பதும், அவ்வாறு கறந்த பாலைக் குடிப்பதும் பாவம் எனக் காரியாசான் இங்கனம் கூறியிருக்கிருர், உரையின் குறிப்பு ஒர்ந்துணரவுரியது. உரிய கன்றுக்குப் பாலே நன்கு விடாமல் அறவே கறந்து கொள்வது பெரிய கொடுமை ஆதலால் அது நெடிய பழி, கொடிய பாவம் என்று மேலோர் கடிய நேர்ந்தனர். மூன்று பசுங்கன்றுகள் ஒர் இடத்தில் கட்டப் பட்டிருந் தன. அக்தி கேரம் வங்க பொழுது அவற்றுள் ஒன்று அம்மா! என்று கத்தியது. அடுத்து நின்ற கன்று ஏன் இப்படிக் கத்துகி முப்?' என்று கேட்டது, "என் அம்மா வருவாள்; எனக்குப் பால் கொடுப்பாள்; கான் குடிப்பேன்’ என்று அது உவந்து சொன்னது; அயலே கின்ற மூன்ருவது கன்று பாலா? அது எப்படி யிருக்கும்? என்று கேட்டது; இரண்டாவது கன்று சிரித்து விட்டு முதல் கன்றைப்பார்த்து ஏன்விணே கத்துகிருப்; இங்கே போட்டுள்ள புல்லைத் தின்ருலும் கொஞ்சம் பசி திரும்; நம்ம காப்ப்பாலை நாம் குடிக்க வாய் வைக்கு முன்பே மனிதப் பாவிகள் வெடுக்கென்று சம்மை இழுத்துக் கட்டி விடுகிருர்க ளே!” என்று கொந்து மொழிந்தது. இந்த மூன்றும் முறையே யாருடைய கன்றுகளாயிருக்கும்? ஆராய்ந்து சொல்லுங்கள் என்று ஒர் அரசன் சபையிலிருந்த மந்திரிகளிடம் கேட்டான். அவருள் முதல் அமைச்சர் மொழிந்தார்: முதல் கன்று விவசாயம் செய்கிற வேளாளனுடையது. இரண்டாவது கன்று பால் விலக்குவிற்கும் கோகு உடையது. 199

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/46&oldid=1326603" இலிருந்து மீள்விக்கப்பட்டது