பக்கம்:தரும தீபிகை 5.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67. கொ டு ைம 1587 படிந்து படுதுயரங்களில் விழ்ந்து பதைப்பாய்; கொடுமையின்றி உள்ளம் இரங்கி உதவிபுரியின் பேரின்ப வெள்ளம் பெருகி நேரே வரும் என்க. ஒருவன் செய்துவரும் செயல்களால் அவனுடைய மனநிலை களும் மருவியுள்ள வாசனைகளும் அறிய வருகின்றன. வெளி அசைவுகள் உள்ளத்தின் இசைவுகளாயுள்ளமையால் அவை மனிதனை அளந்து காணச் செய்கின்றன. இனிமை இன்பங்களே யே யாவரும் விரும்புகின்றனர்; கொடுமை துன்பங்களை எவரும் விரும்புவதில்லை. இவ்வாறு வெறுப்பாயுள்ளவற்றை விரும்பிச் செய்வது விசித்திர வியப்பாயுள்ளது. இளமையிலிருந்தே சிறிது சிறிதாகத் தீமைகளில் பழகி வருவதே பின்பு கொடுமைகளைத் துணிந்து செய்ய ஏதுவாகின் றது. பழகிய பழக்கத்தின் பயனகவே மனிதன் விளைவுற்று கிற் ன்ெருன். கொடுமையால் சீவ இமிசை மருவியிருத்தலால் அதனை யுடையவன் பாவியாப்ப் பழிக்கப்படுகிருன். தன் செயலால் தான் இழிந்து கெடுவதை அறிந்து கொள் ாமல் ஒருவன் களித்துத் திரிவது.அவகேடானமூடமாயுள்ளது. கொடியது கொம்பு ஒடியும் கடியது கால் ஒடியும்.” என்பது பழமொழி. கடுமை கொடுமைகளால் வரும் கேடுகளை இது விளக்கியுள்ளது. இனிய அமைதி மனிதனைத் கனிமகிமையில் உயர்த்துகிறது. கொடிய துடுக்குச் சிறுமையில் ஆழ்த்தி நெடியதுயரங்களை விளைக்கின்றது. படுதுயரில் வீழ்ந்து பதைப்பாய்! என்றது கொடிய செயலால் வரும் பயனே முடிவாகஉணர் ந்து கொள்ள வந்தது. செய்த கொடுமை செய்தவனே உப்தியில் லாத துயரில் ஊக்கித் தள்ளும் ஆதலால் அந்த உண்மையை ஊன்றி நோக்கி அவன் உப்திபெற வேண்டும். உள்ளம் இரங்கி ஒழுகின் இன்ப வெள்ளம் பெருகும். இரக்கத்திற்கும் இன்பத்திற்கும் உள்ள உறவுரிமையை இது உணர்த்தி நின்றது. எவ்வுயிர்க்கும் பாதும் கொடுமையைக் செய்யாதவன் தன் உயிர்க்குப் பெரிய இன்ப நலனைச் செரத வனுகின்றன். அதிசய விளைக் மதி தெளிய வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/48&oldid=1326605" இலிருந்து மீள்விக்கப்பட்டது