பக்கம்:தரும தீபிகை 5.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1614 த ரும தீபிகை தானும் பழியடைந்து தன் கைப்பொருளையும் இழிவடை யச் செய்தலால் உலோபியின் வாழ்வு ஈனமாய்க் கழியநேர்ந்தது. ஈகை இலாமையால் ஒகை அடையாது ஒழிகின்ருன். என்றது பிசுனனுடைய வாழ்வின் பிழைபாடு தெரிய வந்தது. ஈகலில் புகழும் புண்ணியமுமேயன்றி ஈகின்ற பொழுது ஒர் இன்பமும் உள்ளது. ஈயும் பொருளை ஏற்றுக் கொள்ளுகின் றவர் இன்பம் உறுகின்ருர். அந்த மகிழ்ச்சியைக் கண்டு ஈகை யாளன் பேரின்பம் அடைகின் முன். எதிரே நின்ற உயிர் மகிழத் தன் உள்ளமும் மகிழ்கின்றது. புண்ணியத்தோடு கலந்து எழு கின்ற இக்க அரிய இன்பக்கை ஈயும் இயல்புடைய வள்ளல் களே தனி உரிமையாக அடைந்து கொள்ளுகின்றனர். புனித மான இந்த நல்ல இன்பத்தை உலோபிகள் எள்ளளவும் அறியா மல் இழந்து போகின்ருர்; போகவே எள்ளலும் இழிவும் ஏகமா அவர் அடைந்து சாகின் ருர். ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர். (குறள், 338) தம் பொருளை யாருக்கும் கொடாமல் அவமே தொகுத்து வைத்து இழக்கின்ற வன்கண்ணர் ஈந்து மகிழும் இன்பத்தை அறியாரோ? எனத் தேவர் இவ்வாறு பரிதாபமாய் உரைத்திருக் கிருர். அந்த ஈகையின் இன்பத்தை அறிந்திருந்தால் துன்பமும் பழியும் அடைந்து வீணே கம் பொருளை இழந்து போகார்; அறியாமையினலேதான் பெரிய இழவை அவர் மருவி அழிகின் ருர் எனப் பெரியவர் மறுகியுள்ளமை துணுகி யுனா வந்தது. புகழும் புண்ணியமும் அரிய இன்ப கலங்களை அருளி மனித வாழ்வை எவ்வழியும் இனிமை செய்து புனிதமா மகிமை புரிந்து வருகின்றன. உயிரின் உயர் ஊதியங்களான அவை ஈகையால் அமைகின்றன. ஈகையாளன் கீர்த்திமான் கருமவான் எனக் கிளர்ந்து விளங்குகிருன். இத்தகைய ஈதலை இழந்தவன் உலோபியாயிழிந்து நோதலை அடைகின்ருன் பழியும் இழிவும் எவ்வழியும் அவனைச் குழ்ந்து கொள்ளுகின்றன. பொருளின் பயனுன அறமும் இன்பமும் எங்காமல் மறமும் துன்பமும் எ ப்துதலால் அவனுடைய வாழ்வு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/75&oldid=1326632" இலிருந்து மீள்விக்கப்பட்டது