பக்கம்:தரும தீபிகை 5.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66. க ர வு 1547 கடித்து வரினும் உள்ளக் கரவு எப்படியும் உலகிற்குத் தெரிந்து விடுகின்றது; விடவே அவனுடைய பகட்டுகள் எல்லாம் பழிப் புக்கே இடமாய்ப் படுதுயர் புரிகின்றன. உள்ளத்தில் நேர்மையின்றி உரை செயல்களில் பாசாங்கு கள் செய்து வருகிற வஞ்சகனைக் குள்ளநரி என்று உலகம் சொல்லிவருகிறது. சரி மிகவும் தந்திரமுடைய பிராணி ஆதலால் கபட சிந்தனைகளோடு நடித்து வருபவனை நரி என்பது வழக்க மாய் வந்தது. குள்ளநரி என்றது எள்ளல் இழிவுகள் தெரிய. நேர்மையுடையவன் யாண்டும் ஆண்மையாளய்ை நிலவி நிற்பன் ஆதலால் அவன் சிங்கம் என எங்கும் சீர் பெற்று கிற்கின்ருன். வஞ்ச செஞ்சன் எவ்வழியும் அஞ்சி ஒடுங்கிக் கரவே செய்துவருவன்; ஆகவே அவன் குழிகரி என இழிவடைய நேர்ந்தான். உயர்ந்த மனித உருவில் வந்தும் இழிந்த இயல்புக ளால் பலர் ஈனமடைந்து ஊனமாய்க் கழிந்துள்ளனர். தங்களுடைய தாழ்வு நிலையை உணர்ந்து கொள்ளாமல் பெரிய தந்திரசாலிகளாய் வாழ்ந்து வருவதாக அவர் சிங்தை களித்து வருவது மேலோர்க்குச் சிரிப்பை விளைத்து வருகிறது. “Ye brutish among the people; and ye fools, when will be wise.” (Bible) "ஒ மனிதர்களுள் மிருகங்களே! நீங்கள் முழுமூடர்கள்; உங்களுக்கு எப்பொழுது நல்ல புத்தி வரும்?' என ஒரு பெரிய வர் கரவுடையாரை நோக்கி இவ்வாறு மறுகி யிருக்கிரு.ர். வஞ்சமும் சூதும் எங்கனும் பெருகியுள்ளமையால் மனித உலகம் விலங்கின் காடாப் இந் நாள் இலங்கியுள்ளது. இக் நாட்டு வஞ்சகம் மிகவும் அஞ்சத் தக்கது. உள்ளத்தில் கள்ளங் கள் கிறைந்துள்ளன; வெளியே பெரியோர்களைப் போல் உரை களாடி அரிய பதவிகளில் உலாவி வருகின்றனர். அவருடைய வரவும்போக்கும் உலகஉள்ளங்களைக் கொதிக்கச்செய்கின்றன. குள்ளநரித் தனங்கள் எல்லாம் குடிகொண்ட நெஞ்சுடையார் கொடுமை யாவும் மெள்ளமறைத்து இனியவர்போல் வெளிவேடம் பூண்டுலகில் மேன்மை காணத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/8&oldid=1326565" இலிருந்து மீள்விக்கப்பட்டது