பக்கம்:தரும தீபிகை 5.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68. உலோபம் 1621 வாயில் உடலை வறிதொழித்துப் பேயாகி ஒயா துழல்வர் உழந்து.' ஈயர்மல் மாயும் இழி நிலையாளர் காயாத புன்மரம் போல் வினே தோன்றி வளர்ந்து முடிவில் தமது உடலைக் தீயினுக்கு இரையா இழந்து விட்டுப் பேயாய்ப் பிறந்து ஓயாமல் உழலு வர் என இது உணர்த்தியுள்ளது. காயாய்ப் பிறந்திடின் நல்வேட்டையாடி நயம்புரியும் தாயார் வயிற்றின் நாராய்ப் பிறந்து பின் சம்பன்னராய்க் காயா மரமும் வறளாம் குளமும் கல் ஆவுமென்ன ஈயா மனிதரை ஏன்படைத் தாய்கச்சி ஏகம்பனே! (பட்டினத்தார்) நாயும் ஒர் உதவி புரியும்; உலோபி பாதும் பயன் இல்லையே! அவனே ஏன் படைத்தாய்? தெய்வமே? என இறைவனை நோக் கிப் பட்டினத்தார் இப்படிப் பரிந்து கொக்து பாடி யிருக்கிரு.ர். "த்ரிவிதம் நரகஸ்யேதம் த்வாரம் நாசகம் ஆத்மந: காம: க்ரோதஸ்ததா லோபஸ்தஸ்மாத் ஏதத்ரயம் க்யஜேத். ' (பகவற்கீதை, 16-21) 'ஆன்மாவை நாசப்படுத்தி நரகத்தில் கள்ளும் கொடிய தீமைகள் காமம் கோபம் உலோபம் என்னும் மூன்றுமே யாம்; இவற்றை மனிதன் கடிந்து ஒழிக்கவேண்டும்” எனக் கண்ணன் இன்னவாறு போதித்துள்ளார். உலோபம் நரகத்தின் வாசல் என்ற சனல் அதன் கொடுமையைக் கூர்ந்து உணர்ந்து கொள் ளலாம். உயிர்க்கு ஊனம் புரிதலால் ஆன்ம நாசமாய் நின்றது. இரக்கமின்றிக் கொடிய வன்கண்மையா யிருத்தலால் உலோபம் படுபாதகமாய் வந்தது; ஆகவே அதனையுடையவன் பாவியாப் நரக துன்பக்தை அடைய நேர்ந்தான். செல்வத்தைப் படைக்கவும் காக்கவும் அழிக்கவும் வல்ல மனிதன் அதனை நல்லவகையில் உபயோகப் படுத்தாமல் ஊன மாய் நின்ருல் அது அவனை மானம் கெடுத்து னின் ஆக்கி இகழ்ந்து விட்டு ஒதுங்கிப் போகின்றது. பிறர்க்கு உதவாமையால் உலோபி தருமத்தை இழந்தான்; தான் அனுபவியாமையால் இன்பத்தையும் இழந்தான். இன்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/82&oldid=1326639" இலிருந்து மீள்விக்கப்பட்டது