பக்கம்:தரும தீபிகை 5.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1632 த ரும தீபிகை ளன. பழியான பிழைகளை நீக்கி விழி திறந்து நோக்கி மேலான நல்ல வழிகளில் ஒழுகி வர வேண்டும். அவ்வாறு வரின் மனித சமுதாயம் புனிதமாய் உயர்ந்து இனிது வளர்ந்து வரும். நேர்மையான நல்ல கரும நெறிகளில் செல்லமாட்டாமல் அல்லலான அவல நிலைகளிலேயே மனிதர் ஆவலோடு செல்லு கின்றனர். செயல் முறைகள் மயல்களாய் மாசு படிந்துள்ளன. சக்தியமே பேசி வாழும் உத்கம நிலை ஒழிக் து போயது. பொப் பேசாமல் இந்த உலகில் வாழ முடியுமா? என்று யாரும் நீளமாய் எதிர்ந்து பேசும் காலம் நேர்ந்துள்ளது. படுமோச மான நீச நிலையில் மனித வாழ்வு காசம.ை ங் திருக்கலை இக்க வாசகம் நன்கு விளக்கி நிற்கிறது. பொல்லாக வழிகளில் ஆசை பொங்கி ஒடுகின்றது; நல்ல நெறிகளில் நாட்டம் குன்றி இழிகின் றது. யாண்டும் புலைகளே நீண்டு நிலவி நெடிது உலாவுகின்றன. பொப் பேசு, களவு செய், புறம் கூறு என்று யாரும் போதிக்கவில்லை. எவரும் பள்ளிக்கூடங்கள் வைத்து இவற்றைச் சொல்லிக் கொடுக்கவுமில்லை. இவை எல்லாரிடமும் எங்கும் பொங்கி நிற்கின்றன. மெய்யே பேசுக, எ வ்வுயிர்க்கும் இரங்கி யருளுக, யாருக்கும் இடர் செய்யாதே; அயலார் உரிமைகளை மயலாய் விரும்பாகே; புலையும் கொலையும் களவும் ஒழி; 昏T*T இன்னவாறு மேலோர் பலர் காலம் தோறும் நல்ல நெறிகளைப் போதித்து வந்துள்ளனர்; நூல்களும் சாதித்து வருகின்றன; வந்தும் ஒருபயனையும் காணுேம். யாரும் சொல்லிக் கொடாமலே அல்லலான தீமைகளை அள்ளிக் கொண்டு பாண்டும் துள்ளித் திரிந்து துடுக்காய்ச் செய்து மனிதர் உள்ளம் களித்து வருவது அதிசய வியப்பா யுள்ளது. பழி வழிகளில் களி மீதுார்ந்து வருகின்றனர். 'பாவம் என்ருல் ஏதும் பயமின்றிச் செய்ய இந்தச் சீவனுக்கு ஆர் போதம் தெரித்தார் பராபர மே!’ என்று தாயுமானவர் இவ்வாறு இறைவனே நோக்கிப் பரி தாபத்தோடு வினவியிருக்கிரு.ர். மனிதரது போக்கை நோக்கி அக்கப் புனித உள்ளம் துடித்திருப்பதை இதில் ஊன்றி உணர் க்து கொள்கிருேம். அவல நிலைகள் கவலைகளை விளைத்துள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/93&oldid=1326650" இலிருந்து மீள்விக்கப்பட்டது