பக்கம்:தரும தீபிகை 5.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69. தீ ைம 1633 பழகி வந்த பழக்கங்களால் இழி நிலைகளை யுணராமல் ஈனங்களைத் துணிந்து செய்து மானமழிந்து மாந்தர் மாப்ந்து ஒழிகின்ருர். ஆய்ந்து தெளிந்தவர் அவங்களை விலகி உப்கின்ருர். தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினே என்னும் செருக்கு. (குறள், 201) தீவினைகளை அஞ்சி ஒதுங்குவார் மேலோர்; அவற்றை அஞ் சாமல் துணிந்து செய்வார் கீழோர் என இது குறித்துள்ளது. தீமை செய்பவன் பாவியா யிழிந்து படுதுயரடைகின்ருன். அந்தக் கேடு நேராமல் நாடிக் காத்துப் பீடு பெற்று வாழுக. 8ே2. கோனெனினும் நல்ல குலனெனினும் தீவினைசெய் வானெனிலன் ேைனவையம் வையுமால்-ஆனுதவு பாலெனினும் கஞ்சு படிந்தால் அதனை எவர் மேலெனவுண் பார்பின் விழைந்து (a-) இ-ள் சிறந்த அரசன் எனினும் உயர்ந்த குலத்தவன் ஆயினும் தீய செயல்களைச் செய்வான் ஆயின் அவனை உலகம் இகழ்ந்து பழிக்கும், நல்ல பசுவின் பால் எனினும் நஞ்சு கலந்திருந்தால் அதனை யாரும் பருகார்; அயலே கழித்து விடுவர் என்க. அரசன் இயல்பாகவே உயர்ந்த சிறப்புகளை யுடையவன்; உலக மக்களால் உவந்து போற்றத் தக்கவன், அரிய திருவும் பெரிய மேன்மையும் வாய்ந்தவன்; அதிகார ஆற்றல்கள் அமைந்தவன்; அத்தகைய உன்னத நிலையில் உயர்ந்திருக்தாலும் தீய செயல்களைச் செய்வான் ஆயின் யாவரும் அவனை மதியார்; யாண்டும் இழிவாக எவரும் அவனே இகழ்ந்தே தாற்றுவர். வையம் வையும் என்றது தீமையின் வெய்ய நிலையை விழி தெரிய விளக்கி நின்றது. கேடு தீமை என்பன உயிர்களுக்குத் துயர்களாய் வருதலால் அவை பாவங்கள் என நேர்ந்தன. பவமும் பாவமும் பாதகமும் தீவினை. (பிங்கலங்தை) தீவினைக்குப் பெயர்கள் இங்கனம் வந்திருக்கின்றன. 205

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/94&oldid=1326651" இலிருந்து மீள்விக்கப்பட்டது