பக்கம்:தரும தீபிகை 5.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1684 த ரும தீ பி. கை - இதல்ை அதன் இயல்பும் கொடுமையும் அறியலாகும். தீய காரியங்களைச் செய்பவர் பாவிகளாய் இழிதலால் தமக்குக் தாமே அழிதுயரங்களை விளைத்துக் கொள்ளும் பழிகாரராய் இழிந்து எவ்வழியும் தாழ்ந்து அவர் பாழ்படுகின்றனர். கோனுக்கும் குலனுக்கும் பால் இதில் உவமானமாய் வங் துளது. நிலைமை தலைமைகள் கினைந்து சிந்திக்க நேர்ந்தன. பிறப்பிலும் சிறப்பிலும் எவ்வளவு பெருமை வாய்ந்திருங் தாலும் தீமை புரிவரேல் அவர் சிறுமை அடைந்து இழிவர் என்பதை உவமைக் குறிப்புகள் இங்கு நன்கு உணர்த்தி நின்றன. தீமையை நஞ்சு என்று சுட்டியது அதன் கொடுமையும் அடு திய ங்களும் நெஞ்சு தெரிய வங்தது. நஞ்சைக் குடித்த வன் துடித்துச் சாகின்ருன்; தீமையை அடுத்தவனும் அவ்வாறே அல்லல் பல அடைந்து அழிந்து போகின்ருன். உண்ட ந ஞ் ஆங் அந்த உடம்பிலுள்ள ஒர் உயிரை மட்டும் கொண்டு ஒழிகின் றது; செய்த தீமை எய்திய பிறவிகள் தோறும் விடாமல் புகுந்து உயிரை வதைத்துத் துயரங்கள் புரிகின்றது. கொடிய விடத்தினும் தீமை கொடியது ஆதலால் அதனை யாதும் அணுகாமல் எவ்வழியும் அஞ்சி ஒதுங்கி ஒழுக வேண் டும்; பிழையாய் நெருங்கினல் பெருங்கேடுகள் ஒருங்கே விளைந்து மருங்கு எங்கும் துன்பங்கள் நுழைந்து விடும் என்க. தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும். (குறள், 202) தீய செயல்கள் தீயினும் கொடியன; அவற்றை அணுகி குல் அடு துயரங்கள் பல அடைய நேரும், யாண்டும் எவ்வகை யிலும் யாதும் தீண்டாதபடி தீமையை நீங்கி வாழுங்கள் எனத் தேவர் இங்ங்னம் போதித்திருக்கிருர் யாதொரு துயரமும் அடையாமல் வே கோடிகள் என்றும் சுகமாப் வாழும்படி இப் போதனை வந்துள்ளது; வாழ்க்கையில் இதனைச் சாதனை செய்து கொள்பவர் வேதனைகள் நீங்கி மேலான நிலைகளை மேவி விளங்குவார். இமைகழிய தன்மை விளைந்துநலம்பல வருகின்றன. --- -கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/95&oldid=1326652" இலிருந்து மீள்விக்கப்பட்டது