பக்கம்:தரும தீபிகை 5.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69. தீ ைம 1635. 8ே3. தீதெண்ணித் தீதுசொல்லித் துேசெயல் தீவினையாம் ஏதமஃ தெள்ளளவே எய்திடினும்-மீதோடி எல்லே யிலாத இழிதுயர்கள் செய்யுமே ஒல்லை தெளிக வுடன். - (ஈ) இ-ள் எண்ணமும் சொல்லும் செயலும் தீமையான வழிகளில் செல்லுமாயின் அவை விேனைகள் ஆகின்றன; எள் அளவு தி வினையும் எல்லையில்லாத துன்பங்களை விளைத்து உயிர்களை வருத் தும்; ஆதலால் அதனை ஒழித்து ஒழுக வேண்டும் என்க. நெஞ்சம் நினைக்கின்றது, வாய் பேசுகின்றது, கைகள் செய்கின்றன. மனம் வாக்கு காயம் என்னும் இந்த மூன்றின் வழிகளாலேயே மனித வாழ்வுகள் ஊன்றி உலாவி வருகின்றன. நினவும் சொல்லும் செயலும் நீதி நெறிக்ளோடு தோய்ந்து இனியனவாய் வரின் அவை தருமங்களாய்த் தழைத்து அந்த மனித வாழ்வை எவ்வழியும் மகிமைப் படுத்தியருள்கின்றன. அவை கொடியனவாயின் பாவங்களாய்ப் படு துயரங்களை விளக்கின்றன. மூன்று நிலைகளும் ஊன்றி உணர உரியன். களவு கொலை முதலியன காயத்தால் விளையும் இமைகள். பொய் கோள் முதலியன வாக்கால் விளையும் கேடுகள். பிற உயிர்கட்குக் கேடு சூழ்கல் முதலியன மனத்தால் விளையும் பாவங்கள். தீய விளைவுகள் தெளிய வந்தன. இந்த மூவகைகளிலும் இவ்வாருண தீமைகள் நிகழாமல் தன்னைப் பாதுகாத்து வருபவன் புண்ணிய சீலஞயுயர்ந்து புகழ் இன்பங்களை அடைகின்றன். அவ்வாறு காவாமல் தீமைகளில் மேவினவன் பாவியாயிழிந்து கொடிய துன்பங்களை அடைய நேர்கின்றன். அறவண அடிகள் என்னும் பெரியவர் ஒருவர் தீவினை நிலையைக் குறித்துக் தொகுத்துக் கூறி யிருக்கிரு.ர். அயலே வருவது காண்க. -- "தீவினை என்பது யாது? என வினவின் ஆய்தொடி கல்லாய்! ஆங்கது கேளாய்! கொலேயே களவே காமத் தீவிழைவு - உலேயா உடம்பில் தோன்றுவ மூன்றும்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/96&oldid=1326653" இலிருந்து மீள்விக்கப்பட்டது