பக்கம்:தரும தீபிகை 5.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16:36 த ரும தீ பி. கை பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில் சொல்எனச் சொல்லில் தோன்றுவ நான்கும்; வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சி என்று உள்ளம் தன்னின் உருப்பன மூன்றும் எனப் பத்து வகையால்; பயன்தெரி புலவர் இத்திறம் படரார்; படர்குவர் ஆயின் விலங்கும் பேயும் கரகரும் ஆகிக் கலங்கிய உள்ளக் கவலையில் தோன்றுவர்.” (மணிமேகலை, 24) மனம் மொழி மெய்களால் விளையும் தீவினைகளின் வகை களையும் அவற்ருல் விளையும் துயர நிலைகளையும் இது உணர்த்தி யுள்ளது. தீமைகளைச் செய்தவர் மிருகம் முதலிய இழிந்த பிறவி களே அடைந்து கொடிய துன்பங்களை அனுபவிப்பர் என்றகளுல் அவரது அவல நிலைகள் அறியலாகும். தனக்கு வருகிற அல்லல் களையும் அவகேடுகளையும் ஒருசிறிது உணர்ந்து சிந்தித்தால் எவ லும் கீமைகளைச் செய்யத் துணியான். பிழையாய்ப் பழகிய பழக்கத்தாலும் மடமையாலும் கொடிய வினைகளைச் செய்து நெடிய துயரங்களை விளைத்துக் கொள்ளுகின்றனர். கொள்ளவே வாழ்வுகள் துன்பங்களாகின்றன; ஆவதை ஆய்ந்து தெளிந்து ஆன்ம நலனை மேவி உய்ய வேண்டும். 8ே4. இன்பமெலாம் கல்வினையுள் ஈனத் துயரமெலாம் துன்பமிகு தீவினேயுள் தோய்ந்துளவால்-முன்பிதனை நெஞ்சில் கினைந்து நெடுந்தீமை நஞ்செனவே அஞ்சி ஒழிக. அயல். (ச) இ-ள் இன்பங்கள் எல்லாம் நல் வினையால் உளவாகின்றன; துன்பங்கள் யாவும் தீவினையால் விளைகின்றன; இந்த உண்மை களே உள்ளத்தில் ஊன்றி உணர்ந்து தீமைகளை யாண்டும் அஞ்சி பாதும் தீண்டாமல் ஒழுக வேண்டும் என்க. நல்ல சுகபோகங்களை அனுபவிக்கவேண்டும் என்றேயாண் டும் எல்லாரும் ஆவலோடு அலேந்து திரிந்து வருந்தி முயன்று வாழ்ந்து வருகின்றனர். மனித இனம் இனிது என்று கருதி யுள்ள இன்ப நலங்கள் பல வகை நிலைகளில் பரவி நிற்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/97&oldid=1326654" இலிருந்து மீள்விக்கப்பட்டது