பக்கம்:தரும தீபிகை 7.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98. இ ற ப் பு 2433 உடம்பின் பயனை அடைந்து கொண்டால் இறந்து போகும் போது எவரும் பரிந்து வருக்கமாட்டார். பெற்ற பிறப்பின் பெரும்பயனேப் பெற்றவர் மற்ற இறப்பின் மறுகுவரோ---உற்ற பலனடைந்த பின்பு பயிர் அழியின் யாரே புலனழிந்து நிற்பர் புலந்து. இதில் வந்துள்ள உவம நிலையை ஒர்ந்து உறுதி நலனைத் கேர்ந்து கொள்க. வாழ்வாங்கு வாழ்பவன் சாவுக்கு அஞ்சான். நல்ல சிங்கனயோடு புனிதமாய் வாழுகின்றவனுக்கு இம் மையும் மறுமையும் இனிமை சுரங் த இன்ப நிலையமாகின்றன. வையக வாழ்வைவிட வானக வாழ்வு அவனுக்கு மேன்மையாய் வருகிறது; வரவே தேவ ஒளி அவன் பால் மேவி மிளிர்கிறது. மரணத்துக்கு அவன் அஞ்சுவதில்லை; அதனை இயற்கை நிகழ்ச்சியா மகிழ்ச்சியோடு கருதி உறுதியாய் கிற்கிருன். Death has nothing terrible which life has not made so. (T. Edwards) வாழ்க்கையில் கொடுமை இல்லையானல் அந்த மரணத்தில் யாதொரு திகிலும் இல்லை என்று இது குறித்துள்ளது. சாவையும் வாழ்வையும் ஒருங்கே இணைத்து உறுதியுண்மை களை உணர்த்தியுள்ள இதை ஈண்டு நன்கு சிக்திக்க வேண்டும். மனம் மொழி மெய்கள புனிதமாய் நாளும் நயைேடு ஒரு வன் வாழ்ந்துவரின் அவ்வாழ்வு கண்ணியம் நிறைந்த புண்ணிய வாழ்வு ஆகிறது; ஆகவே தேவபோகம் அவனே அணுகி கிற்கி றது; நிற்கவே எடுத்த தேகத்தைக் கழித்து விடுவதில் களிப்பே மிகுதலால் இறப்பு அவனுக்கு உவப்பையே கருகிறது. ஈண்டு வந்து பிறந்த மனிதன் மீண்டும் பிறந்து இறக்தி உழலாமல் சிறந்த பேரின்ப வாழ்வை அடைந்து கொள்ளும்படி பிறப்பு குறிப்போடு உணர்த்தியுள்ளது; அந்த உண்மையை ஊன்றி யுணர்ந்து விரைந்து நன்மை பெறுக. பிறந்தாய் இருந்தாய் பெயர்ந்திறந்து போமுன் அறந்தான் அடைக அறிந்து. ஆருயிர்க்கு உரிய இனிய அமுதம் அறிய லக்கது. 305

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/124&oldid=1327085" இலிருந்து மீள்விக்கப்பட்டது