பக்கம்:தரும தீபிகை 7.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2434 த ரும தி பி கை 922. உடுத்த உடையை ஒதுக்கி அயலே அடுத்த உடையணியும் ஆறே-எடுத்த உடம்பிதை நீக்கி ஒழித்தோர் உடம்பை இடம்பெற கிற்றல் இறப்பு. (a-) இ-ன். உடுத்தியிருந்த ஆடையைக் களைந்த நீக்கி வேறு ஒரு உடையைப் புனைந்துகொள்வதுபோல் எடுத்த உடம்பை இழந்து அடுத்த ஒர் உடலை அடைந்து கொள்வதே இறப்பாம் என்க. இறப்பு இன்ன கிலேயது என்பதை இது உணர்த்துகிறது. உயிர் உடலை எடுத்து வந்துள்ளது. அந்த உடல் உடையை உடுத்தி கிற்கிறது. தான் அணிக்க ஆடையை அது மாறி மாறிக் கனைந்து விடுகிறது; அது போலவே உயிரும் உடலை நீக்கிவிட்டு அயலே ஒன்றை மருவிக் கொள்கிறது. இயல்பாப் நிகழும் இந்த நீக்கத்தையே இறப்பு என்று நாம் குறித்து வருகிருேம். இறத்தல் என்னும் சொல் கடத்தல், கழிதல், முடிதல் என்னும் பொருள்களை'யுடையது. முடிவு தெரிவது விடிவு தெளிவதாம். பிறக் கன யாவும் இறந்து படுதல் இயற்கை நியமமாய்த் தொடர்ந்து வந்துள்ளது. தோன்றியபடியே நீண்டு கில்லாமல் சிலகாலம் மட்டும் கின்று பின்பு தே ர ன் ரு ம ல் எல்லாம் தொலைந்து போதலால் பிறவிகள் மாயத் தோற்றங்கள் என சேர்ந்தன. தோன்றலும் மறைதலும் தொடர்ந்து நிகழ்கின்றன. தெரிவாக ஊர்வன கடப்பன பறப்பன செயல்கொண்டிருப்பன முதல் தேகங்கள் அத்தனேயும் மோகங்கொள் பெளதிகம் சென்மித்த ஆங்கு இறக்கும். (தாயுமானவர்) உடலோடு தோன்றிய உயிரினங்கள் யாவும் பிறந்தபடியே இறந்துபோம் எனத் தாயுமானவர் இவ்வாறு இறப்பு கிலேயை விளக்கி யிருக்கிரு.ர். பிராணிகளுள் மனிதன் மாத்திரம் மரணத் கை எதிரே உணர்ந்திருத்தலால் அதனை எண்ணுந்தோறும் கெஞ் சம் அஞ்ச நேர்ந்தான். அந்த அச்சம் கொச்சையாம். சாவுக்கு அஞ்சுதல் விவேகம் அற்ற செயல். சாவு ஒருவ லுக்கு எப்பொழுது நேருமோ அப்பொழுது கான் வரும்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/125&oldid=1327086" இலிருந்து மீள்விக்கப்பட்டது