பக்கம்:தரும தீபிகை 7.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98. இற ப் பு 2435 அதற்குமுன் யாதும் அனுகாத; அது சேர்ந்தபோது யாராலும் அதனைத் தடுத்து கி.முத்த முடியாது; இக்க முடிவை முடிவாக அறிந்தவர் இறப்பை நினைந்து யாதும் வருந்தார். சாரும்போ தன்றிகமன் சாரான்; தருபோகம் நேரும்போ தன்றி ஒன்றும் நேராதே-ஒரும் உணர்வுடையார் யாதுறினும் உள்ளஞ்சார்; அஞ்சும் உணர்வில் ஒருவன் உளம். தெளிந்த மேதைகள் சாவுக்கு அஞ்சார்; இழிந்த பேதை களே அதற்கு அஞ்சுவர் என்றுகெஞ்சுதெளிய இதுகுறித்தளது. ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச் சாவாரை யாரே தவிர்ப்பவர்-ஒவாமல் ஐயம் புகுவாரை யாரே விலக்குவார் மெய்யம் புவியதன் மேல். (நல்வழி, 13) யாவும் ஊழின்படியே நேரும்; சாவை யாரும் தடுக்க முடியாது என ஒளவையார் இவ்வாறு குறித்திருக்கிரு.ர். உறக்கமும் விழிப்பும் எவ்வாறு இயற்கையாய் நிகழ்கின்ற னவோ அவ்வாறே இறப்பும் பிறப்பும் இயல்பாய்த் தொடர்ந்து தோன்றுகின்றன. நிகழ்ச்சிகள் எவ்வழியும்கியமங்களுடையன. It is as natural to man to die, as to be born. (Васon) பிறப்பது போலவே இறப்பதும் மனிதனுக்கு இயல்பா யுளது என்னும் இது இங்கு உயர்வா கன்கு உணர வுரியது. உடல் தோன்றி மறைவதையே பிறப்பு இறப்பு என உலகம் கூறி வருகிறது. உயிர் என்றும் அழியாதது; யாண்டும் அழி யாத உயிர்க்கு எவ்வழியும் அழிகின்ற உடல் கூடாப் அமை கிறது. உடுத்த உடை அழுக்காய்க் கிழிதல்போல் அடுத்த உடல் கிழமாய் அழிகிறது. இந்த அழிவில் சிங்கை களர்கிறது. குழவி பிள்ளை பாலன் காளை குமரன் கிழவன் என நிகழ்வன யாவும் இளமை கழிக்க இழவுகளேயாம். இளமை கழிவதும் மூப்பு வருவதும் சாவின் தனியான அடையாளங்களாம். பழைய ஆடை கிழிந்த போனல் புதிய ஆடை வருவது போல் மூத்த முதிர்ந்த உடல் இறந்துபோனல் பின்பு இளமை யான புதியவுடல் வளமையாப்ப் பிறந்து வருகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/126&oldid=1327087" இலிருந்து மீள்விக்கப்பட்டது