பக்கம்:தரும தீபிகை 7.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 இ ற ப் பு 2455 தப்பிப் பிழைக்கமுடியாது; இன்னபொழுதுதான் நேரும்என்று எவரும் அதனை முன்னதாக அறிய இயலாது. நெடிய மடமையால் மனிதன் கொடிய தீவினைகளைச் செப் கிருன்; செய்யவே வெய்ய அந்த வினைப்பயன்களை அனுபவிக்க வேறு வேறு பிறவிகளை எடுத்து மாறி மாறி மடிக்க முடிகின் முன்; அம் முடிவு யாண்டும் முடியாமல் மீண்டும் மீண்டும் நீண்டு கெடிது ஓங்கி வருகிறது. நெடிய மரம் சிறிய விதையி லிருந்து தோன்றுதல் போல் கொடிய பிறவி மடமையிலிருந்து தோன்றி மதி கேடாகவே வளர்ந்து மையல் மயக்கங்களே கிளர்ந்து மாய மோகங்கள் விரிந்து தீயவினைகள் சூழ்ந்து ஓயாத சாவுகளிலேயே உழந்து எவ்வழியும் தேயாமல் கிற்கிறது. பேதைமை என்னும் வித்தில் பிறந்துபின் வினேகள் என்னும் வேதனை மரங்கள்நாறி வேட்கைவேர் வீழ்த்து முற்றிக் காதலும் களிப்பும் என்னும் கவடுவிட்டு அவலம் பூத்து மாதுயர் இடும்பை காய்த்து மரணமே கனிந்து கிற்கும். (சீவகசிந்தாமணி) பிறவியை மரமாக இது உருவகித்துள்ளது. வித்து வேர் கிளை மலர் காப் பழம் முதலிய நிலைகள் இங்கே காண வந்துள் ளன. பிறவிக்கு வேட்கையே வேர் என்ற தல்ை ஆசை அம்ருல் ஒழியப் பிறவி அருக என்பது அறிய நின்றன. பிறவிக் காடு களில் மரணங்களாகிய பழங்கள் உதிர்ந்து மீ ண் டு ம் பிறவி களுக்கு வித்தக்களை விரிக்க வருகின்றன. இங்கே குறித்துள்ள பிறப்பு:இறப்புகளின் குறிப்புகள் உய்த்து நோக்கிஉணரத்தக்கன. செத்துச் செத்துப் பிறப்பது உயிர்களுக்குக் கொடிய துயரங்களாய்த் தொடர்ந்திருக்கிறது. பிறப்பு இருக்கும் வரை யும் இறப்பும் கூடவே இருந்தவரும் ஆதலால் பிறவியை அறவே நீங்கி உப்யவே இறைவனே கினேந்த உருகியும் அரிய தவங்கள் புரிந்தும் ஞானிகள் யாண்டும் பெரிதும் முயன்ற வருகின்றனர். தெளிவான உணர்வு ஒளிவீசி ஓங்கவே இளிவான பிறவி நிலைகள் தெரிய நேர்கின்றன; நேர வே நேரே பரமனை எண்ணிப் பரிவு கூர்ந்து உரிமையோடு உறுதிகலனை காடி முறையிடுகின்றனர். --- எழுபிறவி நீர்நிலத்தில் இருவினகள் வேர்பிடித்து இடர்முளேக ளேமுளேத்து வளர்மாயை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/146&oldid=1327107" இலிருந்து மீள்விக்கப்பட்டது