பக்கம்:தரும தீபிகை 7.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95. ஞ | ன ம் 2501 லடைகிருன்; அந்த ஆறுதல் சுகம் என்னும் பேரால் தெரிய வருகிறது. சோகத்தின் நீக்கம் சுகத்தின் ஆக்கமாகிறது. உழைத்து உளைந்து வருக்லால் உடல் களைத்து அயர்கிறது; அந்த அயர்ச்சி நீங்க உறங்குகிருன்; அத்துயிலால் அயர்வு நீங்கி உயர்வுறுகிருன்; அதனைச் சுகம் என்று .ெ ச ல் லி க் கொள்ளுகிருன். தாங்குவதில் ஒரு சுகம் ஓங்கியுள்ளது. காமநோய் கடுந் துயர் செய்கிறது; அந்த வேதனை ரே மாகரைச் சேர்கிருன்; எகோ இன்பம் அடைந்தது போல் உவந்து கொள்ளுகிருன். இன்னவாறே இன்பங்கள் என மனி தன் மயங்கி வருகின்றன யாவும் துன்பங்கள் நீங்கிய நிலைகளே யாம். துக்கங்கள் பக்கம் சிறித ஒதுங்குகின்றன; ஒதங்கவே அவை உவகையான சுகங்களாத் தெரிகின்றன. For all the happiness mankind can gain Ts not in pleasure, but in rest from pain. (Dryden) மனிதன் அடைகிற இன்பங்கள் எல்லாம் துன்பங்களி லிருந்து நீங்கிய நீக்கங்களே அன்றி சுகம் என்று வேறு யாகம் இல்லை என ட்ரைடன் என்னும் ஆங்கில அறிஞரும் இங்ஙனம் கூறியிருக்கிருர், துயரங்கள் உயிரினங்களைச் சூழ்ந்துள்ளன. காலையும் மாலையும் மலங் கழிக்கிருன்; கழிந்த இடத்தை அருவருப்போடு கழுவுகிருன்; சுக்கம் அடைந்ததாக தினேக்கி முன்; உண்மையில் இது சுக்கமா? உய்த்த உணர வேண்டும். உண்ணவில்லையானுல் பசி உயிரைக் கொல்லும்; உண்டதைக் கழிக்கவில்லையானல் மலம் வதைக்கும். மலவாதனை சலவாகன முதலாகப் பலவாதனைகளோடு மனிதன் நாளும் வேதனையுழந்து உழல்கின்ருன். யாக்கை அமைக் துள்ள போக்கை நோக்கி யுணர்ந்தால் புலைநிலைகள் யாவும் விழி எதிரே புலம்ை. நோக்கதனில் பீளே இரு செவிகளிலும் குறும்பி அனம நுகர்வாய் எச்சில் மூக்கதனில் சளிதலையில் பேன்வெயர்வை மலசலங்கள் மூளும் காற்றம் போக்கஒரு நாட்கழுவா விடில் அழுக்கு மிகத்திரண்டு புழுத்து காஅம் ஆ க்கமிலாத் தேகமிதை அழகு என்ன ச் செருக்கல் அறியாமை யாமே. (நீதி நூல்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/192&oldid=1327153" இலிருந்து மீள்விக்கப்பட்டது