பக்கம்:தரும தீபிகை 7.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o T so o தொண்ணுாற்றேழாம் அதிகாரம். த. வ ம் . அஃதாவது பொறிகளை அ ட க் கி நெறி கியமங்களோடு விரதம் பூண்டு ஒழுகும் விழுமிய கிலே பாச பக்கங்களைத் துறந்த வர் உவந்து செய்வது ஆதலால் துறவின் பின் இது வைக்கப் பட்டது. துறவும் தவமும் ஞானத்தின் உறவான தாயதணேகள் 961. மாய உலக மருள் நீங்கி எவ்வழியும் தூய அருள்நிலையைத் தோய்ந்துவரின்-ஆயதுவே செய்ய தவமாகும் தெய்வீக இன்பமெலாம் உய்ய உதவும் ஒருங்கு. (க) இ.ள், உலக மயக்கங்களின் மருள்களே நீங்கி எவ்வழியும் தாய அருள் நிலையைத் தோய்க்க வருக; அவ்வாறு வரின் அதுவே செவ்விய தவமாம்; தெய்வீகமான பேரின்ப நலன்களை எல்லாம் ஒருங்கே நல்கி அது உயர்கதி யருளும் என்க. பொய்யான நிலைகள் மெய்யாகத் கோன்றி மயக்கத்தை விளைத்து வருவது மாயம் என வங்கத வையக வாழ்வுகள் யா வும் வெய்யமாயக் கூத்துகளாய் விரிந்து பரந்து யாண்டும் நீண்டு நிகழ்ந்து நிலவுகின்றன. மருண்ட மயக்கங்கள் தெளிந்து உண் மை நிலைகளை உணர்ந்து உயிர்க்கு உறுதிகாண்பவர் மிகவும் அரி யர். அரிய அந்த நிலையிலிருக்க அருமையாய் வெளிஎறி ஒளி மிகுந்துவரும் பெரியரே துறவி தவசி எனக் தோன்றுகின்றனர். பொறிவெறிகள் ஒருவிப் புலன்களை அடக்கி நெறிகியமங்கள் அமைந்து விரதங்கள் பூண்டு விழுமிய கிலேயில் கழுவி வருவதே தவம் எனவந்தது. தன்னைச் சார்ந்தவரைத் தனிமுதல் தலைமை யில் சாரச் செய்வது என்னும் காரணக்குறி இப்பேரில் பூரண மாப் பொருந்தித் தவத்தின் சீர்மை நீர்மைகளை விளக்கியுளது. வேனே ச் சிவமாச் செய்வது தவம் என நேர்ந்தது. சிவத்தைப் பேணின் தவத்திற்கு அழகு. தவத்திற்கும் சிவத்திற்கும் உள்ள உறவுரிமைகளை ஒளவை யார் இவ்வாறு விளக்கியிருக்கிருர், தவம் பெருகச் சிவம்பெருகும் 323

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/268&oldid=1327229" இலிருந்து மீள்விக்கப்பட்டது