பக்கம்:தரும தீபிகை 7.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2578 த ரும தீபிகை என்பது முதுமொழி. சகநோக்கம் ஒழிந்து அகநோக்கமாய்க் கருதி வருவது தவம் ஆதலால் அந்த வரவில் அதிசய வரவுகள் பெருகி அரிய ஆனந்த நிலைகள் மருவி வருகின்றன. ஒருவன் தவம் புரிய நேர்ந்த போதே அவங்கள் ஒழிகின்றன; அறங்கள் விளேகின்றன. பசி முதலிய துயர்களைப் பொறுத்து உயர் அருளோடு ஒழுகிவருதலால் ப ர ன் அருள் இவனிடம் இயல்பாப் கிறைகிறது. மனம் தவம் மருவ மகிமை மருவுகிறது. உற்றநோய் கோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு. (குறள், 261) தவத்தின் வடிவக்கைத் தேவர் இவ்வாறு வடித்திக் காட்டி யிருக்கிரு.ர். பொறுமையும் கருணையும் தவ உருவங்களாய் மருவி யுள்ளன. தவம் செய்பவர் எவ்வாறு இருப்பர் என்பதைக் குறிப்பா இங்கே கூர்ந்த ஒர்ந்த குணம் தெரிந்து கொள்கிருேம். உயிர்நோய்செய்யாமை உறுநோய் மறத்தல் செயிர்நோய் பிறர்கண்செய் யாமை-செயிர்நோய் விழைவு வெகுளி இவைவிடுவான் ஆயின் இழிவன்று இனிது தவம். (சிறுபஞ்சமூலம்) தவத்தின் மேலுறை தவத்திறை தனக்கலது அரிதே மயக்கு நீங்குதல் மனமொழி மெய்யோடு செறிதல் உவத்தல் காய்தலொ டிலாது.பல் வகையுயிர்க்கு அருளே கயத்து நீங்குதல் பொருள்தனே அனேயதும் அறி.ே (வளேயாபதி) இேர் ஆடல் கிலக்கிடை கோடல் தோஒல் உடுத்தல் தொல்எரி ஒம்பல் ஊாடை யாமை உறுசடை புனேதல் . காட்டில் உணவு கடவுட் பூசை ஏற்ற தவத்தின் இயல்புஎன மொழிப. (தாபதம்) தவத்தின் இயல்புகளைக் குறித்து வந்துள்ள இவை இங்கே சிக்கிக்கத் தக்கன. தவம் புரிவது எவ்வளவு அரியசெயல் எத் துணை செறி கியமங்கள்! என்பன இவற்ருல் அறியலாகும். உண்னும் உணவும் பருகும் நீரும் துறந்து கண்ணனையே கருதிக் கருவன் அரிய தவம் செய்தான். அவன் ஆற்றிய கிலை யை கோக்கி அமாரும் போற்றினர். அகிலமும் அவனை வியந்து புகழ்ந்தது. அயலே வருவன ஈண்டு எண்ண உரியன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/269&oldid=1327230" இலிருந்து மீள்விக்கப்பட்டது