பக்கம்:தரும தீபிகை 7.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2630 த ரும பிேகை அறிந்தார் என்று ஏத்தும் அவர்களேக் கண்டால் துறந்தெழுவார் தூய்க்காட்சி யார். (அறநெறிச்சாரம்) குற்றம் உடையவரை வெறுத்து விலகுவதே நல்லவர்க்கு இயல்பாம்; அவ்வாறு விலகாமல் அவரைப் புகழ்ந்து கொண் டாடி கின்ருல் நல்லவர் ஆயினும் அவரைப் பொல்லாதவர் ஆக வே கருதித் தெளிந்த மேலோர் விரைந்து விலகிப் போவர் என இது விளக்கியுள்ளது. இனம் தெரிவது மனம் தெளிவதாம். இழிந்த புலைகளை உணர்ந்து ஒதுங்கு வோரே தெளிந்தவரா கிருர்; ஆகவே உயர்ந்த நிலைகளை விரைந்து அடைய நேர்கின்ருர். பேரின்ப விட்டுக்கு நேரே போகற்குச் சீரான முதல்படி சிறிய இனங்களைச்சோமையே. கீய தஒழியத் தாயது விளைகிறது. தீயவரைத் கீர்தல், தாயவரைச் சேர்தல், அறிவு நூல்களை ஆய்தல், நெறி நியமங்களோடு ஒழுகுதல், ஆருயிர்கள் பால் அருள்புரிதல், ஆன்ம சிந்தனே தோப்தல் ஆகிய இவை ஆனந்த முத்திக்கு வாயில்களாம். தீங்கினர் தொடர்பு நீங்கிய பொழுதே நன்மைகள் எல்லாம் ஓங்கி வர நேர்கின்றன சுத்தமான இந்த முதல்படியை அடைந்தால் முக்தியை நேரே அடைந்த படியாம். நாலாம் பூமியில் வருமுன் மூன்றுபூமியும் அடைந்து நடந்து மாண்டோர், மேலான பதம் அடைந்து பிறந்து மெள்ள மெள்ளவந்து விடு சேர்வார்; மாலான பவத்தில் விழார், முதல் பூமி கிடைப்பதுவே வருத்தம் மைந்தா! காலான முதல் பூமி கைவந்தால் முத்தியும்கை வந்தது ஆமே. (கைவல்லியம்) வெய்ய தீயரை விலகி மெய்வழி காடுவதே முத்தியின் முதல் கிலையம்; அந்த உத்தமமான தனிமையை உரிமையா அடைக. 978. பற்றின்றி உள்ளம் படிந்து பரணருளைப் பற்றி யிருந்து பழகிவரின்-முற்றியபேர் ஆனந்தம் அங்கே அமைந்துவரும் எவ்வழியும் மோனங் ததும்பும் முதிர்ந்து. )عـy( இ-ள். உலகப் பொருள்களை வெறுத்து விலகிப் பரம் பொருளைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/321&oldid=1327282" இலிருந்து மீள்விக்கப்பட்டது