பக்கம்:தரும தீபிகை 7.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூ ரு வ து அ தி கா ரம். வீ டு அஃதாவது பேரின்ப கிலையமான முத்தித் தலம். துறவு தவங்களே யுடைய ஞானிகள் அடைய வுரியது ஆதலால் இறுதி யில் வைக்கப் பட்டது. முடிவில் இன்பம் உடையது முடிவில் கின்றது. அதிசய ஆனக்க உலகம் மதி தெளிய வந்தது. 091. என்றும் நிலையான இன்பம் கருதியே ஒன்றி உயிர்கள் உலாவுமால்-கன்றென்று தொட்டதெல்லாம் பந்தம் துயராய்த் தொடருதலால் விட்டது வீடு விடு. (க) இ-ள். உயிர் இனங்கள் என்றும் எவ்வழியும் இன்பங்களையே சாடி அலைகின்றன; உலக பந்தங்கள் யாவும் யாண்டும் துன்பங்களை யே தொடர்ந்து தந்து படர்க்க வருகின்றன; ஆகவே அவற்றை அறவே விட்டதே பேரின்ப வீடு எனப் பெருமை பெற்றது. விட்டு கிலையை இது காட்டு கின்றது. அறிவுடைய உயிர் வகைகளுள் மனிதன் பெரியவனப் நெறி யே பெருகி வந்துள்ளான். உடலோடு கூடிய வாழ்வையும் உலக நிலைகளையும் பலவகைத் தொடர்புகளையும் கருதி யுணர்ந் தான். மருவிய உரிமைகள் மதிகலங்களை அருளின. உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும் இயல்பாக வேண்டியுள்ளமையை நேரே தெரிந்தான். பொறி புலன்களின் சுவை நுகர்வுகளைச் சுகம் என நினைந்தான். அந்த டிகர்ச்சிகளுக்கு உரிய முயற்சிகளைச் செய்தான். கே.க போகங் கள் இன்பம் என நேர்ந்தன. சுகமான வாழ்வுகளை விரும்பவே அவற்றிற்கு உரிய கருவிகள் பொருள்கள் என வந்தன. இன்பமும் பொருளும் உரிமையாய்த் தெரியவே அவை நிலைத் துவர வேண்டுமே என்னும் ஆவலால் பிறர்க்கு உபகாரங் களைச் செய்தான்; இகமான அச்செயல் கருமம் என வந்தது. மனித வாழ்வுக்கு இம்மூன்றும் இனிமையா யிருந்தாலும் சிறிது காலம்தான் சேர்ந்து கிற்கின்றன; உடல் அழிந்தபோ 33é

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/364&oldid=1327327" இலிருந்து மீள்விக்கப்பட்டது