பக்கம்:தரும தீபிகை 7.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2674, த ரும பிேகை ல்ை யாவும் மறைந்து போகின்றன. உயிர் என்றும் கிலேயாப் கின்று வாழுவதற்கு உரிய நிலையம் ஒன்று இருக்க வேண்டும் என்று துணிந்தான். தான் கண்டது சிற்றின்ப வீடு ஆதலால் அதற்குப் பேரின்ப வீடு என்று பேர் தந்தான். ஆறறிவுடைய மனிதனல் இந்த நான்கும் அடைய வுரியன என்று அருளின்ை. அறம்பொருள் இன்பம்வீடு அடைதல் நூற்பயனே. (நன்னூல்) நூலின் பயனை இலக்கண நூலார் இங்கனம் குறித்திருக் கிருர். வைப்பு முறை மிகவும் செப்பமான நுட்பம் உடையது. இந்த நான்கையும் புருடார்த்தம் என்பர். புருடல்ை உரி மையா அடையத் தக்கன புருடார்த்தம் என வந்தன. தர்மம் அர்த்தம் காமம் மோசடிம் என வடமொழியாளர் இவ்வாறு கூறி வருகின்றனர். சீவகிலைகள் ஆவலோடு தெரிய சேர்ந்தன. உயிர் வாழ்வில் இயல்பாக நிகழுகின்ற நிகழ்ச்சிகளை வகுத்து வரம்புசெய்து வைத்திருப்பது நுனித்து உணர வந்தது. உற்ற தேகத்தை மனிதன் உரிமையா வளர்க்க நேர்க்கான். இன்ப நுகர்ச்சிகளை விரும்பினன்; அவற்றிற்கு அவசிய மான பொருளை ஈட்டினன்; அது பெருகி வருதற்குப் புண்ணி யத்தைச் செய்தான்; அகனல் மறுமை இன்பமும் பெறலாம் என்று உறுதி செய்து கொண்டான். இந்த நான்கின் நிலைகளை யும் கலையுணர்வுடன் ஒளவையார்செவ்வையாவிளக்கியிருக்கிருர் ஈதல் அறம், தீவினேவிட்டு ஈட்டல்பொருள்; எஞ்ஞான் அறும் காதல் இருவர் கருத்து ஒருமித்து-ஆதரவு பட்டதே இன்பம்; பரனேகினேந்து இம்மூன்றும் விட்டதே பேரின்ப விடு. (ஒளவையார்) அறம் என்ருல் என்ன? பொருள் எது? இன்பம் யாது? விடு எத்தகையது? என்னும் இத்தகைய கேள்விகளுக்கு வித்தக வினேகமா விடை கூறியிருக்கும் அழகை இதில் வியந்து காணு கின்ருேம். விரிந்த பொருள்களைச் சுருக்கித் தொகுத் து நயமாக் குறித்திருப்பது கூர்ந்த சிந்தித்து ஒர்ந்து உணரத் தக்கது. o இன்பமே வேண்டும் என்று மனிதன் பாண்டும் விரும்பு கிருன். உலகில் அனுபவிக்கிற சுகங்கள் நிலையில்லாகன; பல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/365&oldid=1327328" இலிருந்து மீள்விக்கப்பட்டது