பக்கம்:தரும தீபிகை 7.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 வி தி 2363 செய்த தீமையைத் தொடர்ந்தே தண்டனையும் அடர்ந்து நிற் கிறது என இது குறித்திருக்கிறது தனக்கு வருகிற துயரை உணராமல் இடர்களைச் செய்து படருழந்து படுதுயராப் உழல் வது மனிதனிடம் கொடிய மூடமாய் கெடிது ஓங்கியுள்ளது. அறிய வுரியதை அறியாமையால் அல்லலைச் செய்து எல்லை யில்லாத தொல்லைகளை அடைகிருன். நல்ல மதி மாண்டுபோகவே பொல்லாத விதி மூண்டு வர நேர்ந்தது. மனிதன் அரிய கல்வி களைக் கற்கிருன். பெரிய செல்வங்களைப் பெறுகிருன்; ஆனல் அறிய வேண்டியதைச் சரியா அவன் அறிந்து கொள்வதில்லை. தன்னுடைய நினைவு செயல்களிலிருந்தே வினை விளைகிறது; அந்த வினையே பின்பு விதியாய் வருகிறது; வினைமூலம் இனியது ஆனல் நல் விதி; கொடியது ஆளுல் தீ விதி; நல் விதி யாண்டும் இன்பம் நல்கும்; விேதி என்றும் துன்பமே தரும்; இந்த உண் மையை ஒருவன் என்று உணர்ந்து நன்று புரிகிருனே அன்றே அவன் அல்லல் எல்லாம் நீங்கி நல்ல சுகங்களைப் பெறுகிருன். 899. கொற்றக் குடைகவித்துக் கோவாய் கிலவலும் ஒற்றைத் துணியின் றுழலலும்-உற்ற வினையின் பயனின் விளைவே அயலே கினேயின் உறுவதெவன். (க) இ-ள். வெண்கொற்றக் குடைகவித்து அரியணையில் அமர்ந்து சிறந்த அரசனப் ஒருவன் உலகை ஆளுதலும், உடுக்க ஒரு கிழிக்க துணியும் இன்றி ஒருவன் இழிந்து உழலுதலும் வினையின் விளைவு களே; இவற்றை ஈண்டு உணர்ந்து கொள்ளவேண்டும் என்க. உலக வாழ்வில் மனிதருடைய கிலைகள் பலவகைகளில் மாறுபாடாப் வேறுபட்டு விரிந்து கிற்கின்றன. உருவ பேதங் களைப் போலவே வாழ்விலும் பேதங்கள் பெருகியுள்ளன. சிலர் இயல்பாகவே வளங்கள் பல வாய்ந்து சுகமாய் வாழுகின்றனர். சிலர் சிறிது முயன்று பெரிதும் உவகையராய் உலாவுகின்றனர். சிலர் வருங்கி உழைத்து அருங்கிய அளவில் சீவிக்கின்றனர், பலர் படாதபாடுகள் பட்டும் பசியும்பட்டினியுமாய்ப்பதைக்கின்றனர். பலர் அவல நிலைகளில் கவலேகளா யிழிந்து மறுகியுழலுகின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/54&oldid=1327015" இலிருந்து மீள்விக்கப்பட்டது