பக்கம்:தரும தீபிகை 7.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2364 த ரும தீபிகை யாதும் இல்லாமல் பலர் அல்லலாய் அலமந்து கிரிகின்றனர். ஒத்த பிறப்பினையுடைய மக்கள் உள்ளே இத்தகைய வேறு பாடுகள் ஏறி நிற்கின்றன; இந்நிலைகளுக்குக் காாணம் என்ன? வெளியே காணப்படுகிற காரியங்களுக்கெல்லாம் பூரணமான காரணங்கள் உள்ளே மருமமா மறைந்திருக்கின்றன. தாம் செப்த வினைகளின் அளவே பலன்கள் விளைந்து வங் துள்ளன; அந்த வினைப்போகங்களை மாந்தர் முறையே நுகர்ந்து வருகின்றனர். அத்துகர்வில் வேறுபாடுகள் நேரே கெரிய கின் றன. இனிய சுகமும் கொடிய துக்கமும் வினையின் விளைவுகள். தழைவிரி கற்ப நாடு சார்தலும், புவியில் யாரும் விழைதரு போகம் துய்த்து மேவலும் கல்லூழ் ஆமால்; பிழைபட கிரயத்து ஆழ்ந்து பெருந்துயர் உறலும், மண்மேல் குழைமிடி ஆதித் துன்பு கூர்கலும் தீயூழ் அன்றே. (குசேலம்) வினைகளின் பயன்களை இது நன்கு விளக்கியுள்ளது. இம்மையில் நல்ல சுகபோகங்களே அனுபவித்தலும், மறு மையில் தேவ போகங்களை அடைதலும் கல்வினையால் அமை கின்றன; இங்கே வறுமை நோய்களால் வாடி உழலலும், பின்பு கொடிய நரக துன்பங்களில் அழுந்தி வருந்தலும் தீவினையால் நேர்கின்றன. சீவிய நிலைகள் சிந்தனைக்கு வந்தன. தாம் செய்த கரும பலன்களையே யாவரும் அனுபவிக்க நேர்ந்துள்ளனர். விரும்பினும் விரும்பாவிடினும் த ம் ைம ச் செய்தவரை இம்மியும் தவருமல் செம்மையா வந்து அவை சேர்ந்து கொள்ளுகின்றன. அவ்வாறு சேர்ந்ததே அனுபவமாம். கழுமலத் தியாத்த களிறும் கருவூர் விழுமியோன் மேற்சென் றகல்ை-விழுமிய வேண்டினும் வேண்டா விடினும் உறம்பால தீண்டா விடுதல் அரிது. (பழமொழி, 62) ஒருமுறை சோழநாடு அரசனே இழந்திருந்தது; உரிய ஒருவன அடைய விரும்பிக் கழுமலம் என்னும் ஊரிலிருந்த பட்டத்து யானையை அலங்கரித்து அமைச்சர் வெளியே விட்டனர்; அது பல இடங்களையும் கடந்து முடிவில் கருவூர்க்கு வந்தது; கெரு வில் கின்ற ஒரு இளைஞனே எடுத்து முதுகில் வைத்துக் கொண்டு போயது: அக்குமரனே யாவரும் வணங்கி அரசன் ஆக்கினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/55&oldid=1327016" இலிருந்து மீள்விக்கப்பட்டது