பக்கம்:தரும தீபிகை 7.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91. பி. ற ப் பு 2373 வம் இருவகைகளும் கலந்து நின்றவர் மனித மரபுகளில் மருவி வந்துள்ளனர். வினவிளைவுகளின் நிலைமைகளுக்குத் தகுக்கவாறு அனுபவங்கள் அமைந்த நிற்கின்றன. துன்ப இன்பங்களின் நுகர்வுகள் தொடர்து படர்ந்து யாண்டும் அடர்ந்திருக்கின்றன. பிறவி எவ்வழியும் துயரம் உடையது. கருவில் மருவிய காள் முகல் முறையே உருவடைந்து பத்து மாதமும் காப் வயிற் அறுள் சுருண்டு கிடந்து பருவம் அடைக்கவுடன் மருண்டு புரண்டு மறுகி மயங்கி உருண்டு வந்த உயிர் பூமியில் விழுகின்றது; அப் பொழுது அக்காப் படுகிற பிரசவவேதனையும், சேய் அடைகிற துயரமும் வாய்மொழியால் வரைந்த கூற முடியாதன. அவ் வாறு பிறந்த குழந்தை உடனே விறிட்டு அழுகிறது; ஏன்? அங்கோ துன்பவுலகில் புகுக்கேன், ஒயாக துயரங்களை அனு பவிக்க நேர்க்கேனே! என்ற சோகம் இயல்பா ஏற வேகமா அழச் செய்தது. பிறக் கவுடனே குழந்தை அழவில்லையானல் அ.க விரைக்க இறக் து போய்விடும். இருக்க வளர்ந்து மூத்து கொக்க சாக வேண்டிய அவசியமில்லை ஆகலால் அ ழ த வாயோடு அக்குழவி மறைந்து போகிறது. இந்த மருமங்களே இங்கே சிக்தித்துக் கருமங்களேத் தெளிந்து கொள்ள வேண்டும். பிறக்கபொழுதே எழுத்த அழுகை வாழ்வின் அல்லல் நிலை களே விளக்கி இறக் து போகும் வரையும் தொடர்ந்து நின்று முடி வில் எல்லாரும் கூவிப் புலம்பிக் கூடி அழும்படி புரிந்து உடலைக் கிடத்தி விட்டு ஆவி அயலே ஒழிந்து போகிறது. அல்லலும் அவலமும் கிறைந்துள்ளமையால் பிறவி பொல்லாப் புலை என சேர்க்கது. அழுத பிறந்து, அழுது வளர்ந்த, அழுது வாழ்ந்து, அழுது மாய்க்த, முழுதும் மாயமாப் முடிந்து போகின்றது. When we are born, we cry that we are come To this great stage of fools. (King Lear. 4.6) பெரிய பீடையான இந்த மூட உலகத்தக்கு வந்திருக் கிருேமே! என்று வருந்தி நாம் பிறந்த பொழுதே அழுகிருேம் என இது குறித்திருக்கிறது. மனிதப் பிறப்பின் நிலையைக் குறித்து ஆங்கிலக் கவிஞரான ஷேக்ஸ்பீயர் இங்ஙனம் பாங் கோடு பகர்ந்திருக்கிருர். பிறவியும் அழுகையும் உறவாயுள்ளன. We are born with travail and strong crying,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/64&oldid=1327025" இலிருந்து மீள்விக்கப்பட்டது