பக்கம்:தரும தீபிகை 7.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92. இரு ப் பு 2407 918. உண்டு களிப்பார் உறுதி நலமொன்றும் கண்டு களியார் களிப்பெல்லாம்-மண்டும் பழியும் இழிவும் படர்ந்தே வருமால் அழிவே அவர்வாழ்வு அவம். (E) இ-ள். வயிறு ஆர உண்டு களிக்கிருர், தயர் ரே உயர்நிலை யாதும் ஒர்ந்து காணுமல் பழியும் இழிவும் சேர்ந்து கண்டு பாழே அழி கின்ருர், பழுதான இவர் வாழ்வு முழுதும் பரிதாபமாம் என்க. அறிவு நலங்கள் அமைந்திருக்தம் பெரிய உறுதி நிலைகளைக் கருதியுணராமல் மனிதர் மருள சாப் இழிந்து காலத்தை விணே கழித்து ஒழிகின்ருர். வாழ்வு நல்ல பண்பாடுகளோடு கலந்த அளவுதான் சிறந்த இன்பம் உடையதாய் உயர்ந்த மேன்மை களே அடைந்து வருகிறது. நெறியோடு புனிதமாய் வாழுகின்ற மனிதன் இவ்வுலகிலேயே இனிய பல நன்மைகளை அடைகிருன்; மேலான ஒரு தேவன அவன் மதிக்கப் படுகிருன். வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும். (குறள், 50) ஒரு மனிதன் இவ்வுலகில் எவ்வாறு வாழ வேண்டும் என்ப தைத் தேவர் இவ்வாறு விளக்கியிருக்கிரு.ர். விளக்கம் விநயம் மிகவுடையது. மனிதனைத் தெய்வம் ஆக்கும் மக்திரம் இங்கே சிந்தனைக்கு வந்துள்ளது. வாழ்வாங்கு வாழுக என துணுக்க மாகவும் சுருக்க மாகவும் குறித்திருக்கிருர். இந்த வாழ்க்கைச் சூத்திரத்திற்கு உரிய விரிவான பொருள்களை ஒ வ் .ெ வ | ரு மனிதனும் கூர்ந்த ஒர்ந்து கொள்ள நேர்ந்த நிற்கின்ருன். தன்னுடைய வாழ்க்கை கண்ணியமான புண்ணிய நீர்மை தோய்ந்து வர எவன் ஆற்றி வருகிருனே அவன் விண்ணவனப் விளங்கி வருகிருன். கான் செய்யும் கருமங்களுள் கருமங்கள் கழுவிவரின் அந்த ம னி த னே க் தெய்வமாக்கும் மருமங்கள் அங்கே மருவியுள்ளன. செயல்புனிதமாக மனிதன் உயர்கிருன். வையத்துள் வாழ்பவர் மனிதர். வானத்துள் வாழ்பவர் தேவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/98&oldid=1327059" இலிருந்து மீள்விக்கப்பட்டது