பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II 6 ஆம் அதற்கும் மேலே என்று சொல்லலாம். அந்த மனிதரின் சொல் முக்காலமும் நின்று நிலவும் விந்தைச் சொல்; மந்திரச் சொல்; தந்திரச் சொல் -அதுதான். 'ஸார், போஸ்ட்!” இந்தக் கீதத்துக்கு சங்கீத டைரக்டர் தேவை யில்லை; பின்னணிப் பாடகர் தேவையில்லை. ஆளுல் இந்தப் பல்லவி உள்ளம் உருகச் செய்யும், ஊனுருகச் செய்யும்; கேட்டோர் பிணி நீங்கும் இச்சொல்லை ஆரத்தி எடுத்து வரவேற்காத மாட மாளிகைக் கடகோபுரம், சாதாரண வீடு, எட்டடிக் குச்சுஏதாவது ஒன்று சாஸ்திரத்துக்காகிலும் இருந்தால் அது சர்வ நிச்சயமாகப் :பலே செய்தி' யாகத்தான் பரிமளிக்க முடியும்! ஒரு வீட்டுப் படி ஏறி இறங்குவதென்ருல் அதற்குக்கூட ஒரு லிப்ட் இருக்கலாகாதா என்று லகாரப் பெருமூக்சு விட்டு, கப்பல் கவிழ்ந்தமாதிரி தலையில் கையை லாகவமாக வைத்துக் கொள்ளும் அதிசய நாள் இது. அப்படிப்பட்ட நாளிலே சோர்வும் ஓய்வும் காணுமல் கருதாமல், கருமமே கண்ணுகி, படிக்குப்படி ஏறி இறங்கி, எதிர்பார்த் திருப்பவர்களுக்கெல்ல்ாம் உண்டு-இல்லை’ என் பதை இதமொழியாக்கிப் பலமுடன் சொல்லும் அந்த ஒரு சொல்லுக்கு மாத்திரம் லட்ச ரூபாய் கொடுக்கலாம்-பணமும் மணமும் ஒன்று கூடும் சந்திப்பு நிலையமாக நாம் இருக்கக் 'கொடுத்து வைத்திருந்தால்!