பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盖星岁 புன்மையாளர்கள் நடுங்குவார்களாமே - அதே போலத்தான் வக்கீல் நோட்டீஸ் எதிர்பார்க்கும் புண்ணியவான்களும், பொய்ச் சாட்சிகளும், இன்ன பிற போலி வெத்து வேட்டு ஆசாமிகளும் நடு நடுங்க வேண்டும், இந்த வேடிக்கை மனிதரின் நிழல் பட்டமாத்திரத்திலே! அது மட்டுமா?-அகில உலக முக்கியத்துவம் பெற்ற பிரமுகர் இவர்-நூற்றுக்கு நூறு உண்மை வாசகம் இது. கால்த்தையும் தூரத்தையும் ராசி' பண்ணி வைக்கும் கால தூதன் இவர்-ஆனல் யமதர்ம ராஜன் என்கிறீர்களே, அந்தப் புண்ணிய வானுக்கும் இவருக்கும் ஸ்ஞனப் பிராப்தி கூடக் கிடையாது! போட்டோ பிடித்தாற் போல, குனித்த புருவ மும், கொவ்வை இதழில் குமிழ்ச் சிரிப்பும் கொண்ட இந்தப் பேசும் தெய்வம், பாதை தெரி யாமல் திண்டாடும் நண்பர்களுக்கு நம் விலாசம் சொல்லி, நம்மைக் காட்டிக்கொடுக்கும் மார்க்க பந்துவாகவுமன்ருே காட்சி தருகின்றது? 'போஸ்ட் மேன், எனக்கு ஏதாவது லெட்டர் இருக்கா? 'உங்களுக்கு இப்பத்தான் ஸார், ஊரிலே லெட்டர் எழுதிக்கிட்டு இருக்காங்க!” 'ஏம்பா, எனக்கு எம். ஒ. வந்திருக்க வேணுமே?” 'எம். ஒ. இல்லீங்க, எம். ஒ. ரசீதுதான் வந்திருக்கு!’’