பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16


கிராமங்களில் இருப்பவர்கள் தம் குழந்தை குட்டிகளைத் தோளில் துரக்கி வைத்துக்கொண்டு ‘விர்விர்' என்று நடந்து சென்று மகிழ்வார்கள். அதே குழந்தைகள் பெரியவர்களாக மாறியதும். பெற் ருேர்களுக்கு அடங்காமல் அடம் செய்யும்போது, தோளுக்கு மேல் தோழன்! என்ற வாசகத்தையும் மறந்துவிட மாட்டார்கள்! தோளில் ஆட்டைப் போட்டுக் கொண்டே தேடுகிருயே! என்னும் பழமொழி பழைய நாளிலும் சரி, புதிய நாளிலும் சரி, மெளஸ் குறை யாமல் போற்றப்பட்டு வருகின்றது. - மனிதனுடைய பலம் முழுதும் ரிஸர்வ்’ செய் யப்பட்டுள்ள இடம் தோள் என்பது பொய்யாக இருக்க முடியாது. அதற்காகத்தான் தோள் வலி மிக்க போர் வீரர்கள் வெற்றியடைந்தவுடன், அவர் களுக்குரிய பரிசுகளைத் தோள்களிலேயே அணிவிக்கி ருர்களோ, என்னவோ? போலீஸ், இராணுவ உத்தி யோகஸ்தர்கள் தங்கள் பதவிகளைப் பறையறிவிக்க எண்ணி, பதவி பட்டங்களைத் தோள்களிலேயே ஆடம்பரமாக அணிந்து கொள்கின்றனர்! கணவன்மார்களின் வரவுக்காகக் காத்திருக்கும் பட்டணத்துப் பெண்கள் தங்கள் தோள்கள் மீது ஏதாவது ஸ்பரிசம் பட்டால், உடனே அது தங்க ளுடைய உரிமையாளர்கள் என்பதை யூகித்துக் கொள்வார்கள். அதே பெண்டிர், தம் புருஷன் ஏதாவது புடவை வாங்கித்தர மறுத்துவிட்டால் தங்களுடைய முகவாய்க்கட்டையைத் தோளில்