பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40


கணம் இவ்வுலகச் சிந்தனேயே இற்றுவிட்டது. ஏனென்ருல், காதற்கனவு சிதைந்துவிட்டதோ என்ற சந்தேகம் தட்டியது. பிறகு, சுயநினைவு நெஞ்சக் கதவைத் தட்டியது. அப்போதுதான்? அவர்கள் பரஸ்பரம் குறுஞ்சிரிப்பைப் பரிவர்த்தனை செய்து கொண்டார்கள். இவ்வாறு திருமணமாகப் போகும் தம்பதி, திருமணத்திற்கு முன்னதாக, அழைப்புக்களைக் கொடுத்து வாங்கிக்கொள்வது எங்கோ ஒரு நாட்டில் நிகழும் சம்பிரதாயச் சடங்கு என்ற விவரத்தைச் சொல்லிச் சிரித்து மகிழ்ந்த கதையும் நினவுக்கு வந்தது. அவ்விருவருக்கும் மறு பிறப்பு எடுத்தாற்போன்றிருந்ததாம்! இருக்காதா, பின்னே? இருந்திருந்தாற் போன்று, கள்ள நகைப்பின் இனிய சிற் றலைகள் என் செவிகளிலே, ரீங்கார மிடவே, நான் தலையை நிமிர்த்தினேன். புன்னகை யின் புது நிலவாய் அமிர்தம் நின்ருள். என்ன அத்தான், நம்முடைய கல்யாணப் பத்திரிகையை கண்கொட்டாமல் அப்படியே பார்த்துக்கொண்டே நிற்கிறீர்களே?...பழங்கதை உங்களுக்குப் படம் காட்டியிருக்குமே! ஊம்!...” என்ருள் அவள், சிரித் தாள்-சிரிக்கப் பழகியவள்! இப்பொழுது நீங்களே சொல்லுங்கள்; இந்த அழைப்பை வாழ்த்தாமல் என்னல் இருக்க முடி யுமா? . . . .