பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49


இந்தக் கடிகார முள் என் சிந்தனையில் சுற்றியது. நல்லவேளை, அது என் மூளையைக் குத்தவில்லை. ஆனால், அலுவலகத்துக்குப் புறப்பட்ட என்னைத் தடுத்து நிறுத்தியது ஒரு பொருள். பாதத்தில் ரத்தம் கசிந்தது. குனிந்து பார்த்தேன். அது ஒரு முள்! அந்த முள்ளை மற்றோரு முள்ளினால் எடுத்துப் போட்டுவிட்டு மேலே நடந்தேன். முள்ளை முள்ளினால்தான் எடுக்க வேண்டுமென்ற 'சாணக்கிய தந்திரம் எல்லோருக்குமே சீக்கிரம் பிடிபடாது•

முள் மூர்த்தியில் சிறியதுதான். ஆனால் அதன் கீர்த்தி மிகமிகப் பெரிது. அது மட்டுமல்ல. அன்றாட வாழ்க்கையில்தான் இந்த முள் எத்தகைய முக்கியத்துவம் பெற்றிருக்கிறது? `வாழ்க்கை ராஜ பாட்டையல்ல; அது முள் நிறைந்த பாதை´ என்கிறார்கள் சிலர். ‘வாழ்க்கை முட்பாதை என்றாலும்கூட, அதையே ராஜ பாட்டையாக ஆக்கிக்கொள்ள முயலவெண்டும்’ என்று உபதேசிக்கிறார்கள் வேறு சிலர்.

நம் சமூகம் முள் வேலியாக அமைந்துவிட்டது என்று எழுத்தாளர்கள் வர்ணிக்கிறார்கள். இவர்கள் உபயோகிப்பது பேனா முள் காதலன் பிரிவால் அல்லற்படும் காதலிகளுக்குப் படுக்கை முள்ளாகக் குத்தும் இதுவும் பேனா மன்னர்கள் அளக்கும் கதை தான்!

தூண்டிற் புழுவினைப்போல்’ என்ற பாட்டை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். இங்கே தூண்டில் என்பது, துரண்டில் முள்ளையேதான் குறிக்கும்.