பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

73

அதாவது என்னையும்—என் அமிர்தத்தையும் வாழ்த்தியதை நான்மறந்தாலும். அமிர்தம் மறக்க மாட்டாள். ஏனென்றால், சிரிப்பு பற்றிய இக்கட்டுரைக்கே அவள் குமிழ் சிரிப்புத்தான் காரணம். கட்டுரை வெற்றிபெற்றால் கட்டாயம் அவளுக்குத்தான் இந்தச் சிரிப்பைக் காணிக்கை செலுத்தப்போகிறேன்!

ஒரு சமயம் என் புத்தகம் ஒன்று வந்தது. ‘அமிர்தம்’ என்று பெயர் புத்தகத்துக்கு. இது பிரசுரத்தார்கள் இட்ட பெயர். ஆனால் இதைக்கண்டு என் மனைவி கொட்டிய கொள்ளை முறுவல் வெள்ளத்திற்குக் குவலயமே ஈடில்லை. ஏனென்றால் அவள் பெயரும் அதுதானே. நானே வேண்டுமென்று அவள் நினைவாக அவள் பெயரையே புத்தகத்திற்குச் சூட்டிவிட்டதாக அவள் நினைத்திருக்கிறாள்! நல்லவேளை, புத்தகத்தின் அட்டையையும் தனதாக்கிக்கொள்ளாமல் என்னைத் தப்புவிக்கச் செய்துவிட்டாள்...!

கலைக் கண்களுடன் உற்று நோக்கினால் வானம் சிரிப்பதையும், வையம் சிரிப்பதையும் பூ புன்னகைப் பதையும் இயற்கை சிரிப்பதையும், நிலா, அருவி சிரிப்பதையும் கண்கூடாகக் காணலாம். பூக்கள் சிரிக்கின்றன; புள்ளினங்கள் நகைக்கின்றன. தெரியாமலா அழகின் சிரிப்பைப் பாடுகிறார் நம் கவியரசர்!

‘ஊஹூம் சிரிக்காதே’ என்று 144 போடும் நிலையிலும்கூட-அதாவது துக்கத்தின் வரம்புமீறிய