பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 க. சமுத்திரம் இங்கே பயிற்சி பெற்ற பிறகு, நீங்கள் உங்கள் டியார்ட்மெண்டுக்குப் போய், அங்கே உள்ள உங்கள் சகாக்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்பதே இந்தப் பயிற்சியின் நோக்கம். பத்தாம் பசிலியாய் வந்து நவீனத்துவமாய் திரும்ப போகும் உங்களிடம், உங்கள் சகாக்கள் நிறைய எதிர்பார்ப்பார்கள். அவர்களின் எதிர்ப்பார்ப்பை நீங்கள் ஈடேற்ற வேண்டும். ஒரு மெழுகுவர்த்தி பல மெழுகுவர்த்திகளை எளிய விடுகிறதல்லவா. அப்படி. எப்படி.." 'டில்லியின் செல்வன் வர்மா விளக்கம் சொல்லப் போனபோது, நமது ராமையா எழுந்தார். கம்பீரமாக, வேட்டியை விடாப் பிடியாகக் கட்டியிருக்கும் மனிதர். ஆத்திரத்தின் முதிர்ச்சி முகத்தில் தெரிந்தது. இதற்குள், அந்த கண்டுபிடிப்பை' அடக்கமுடியாமல் அவரோடு எழுந்த கே.என்.எஸ், ராமையாவிடம் ரகசியம் போல் பகிரங்கமாகவே பேசினார். "பாருடா ராமு. அப்போ தனித்தனியா உட்கார்ந்திருந்த முன்னியும் சஞ்சயும் இப்ப ஒண்ணாய் உட்கார்ந்து டயலாக் பேசறதைப் பாருடா.” ராமையா, சீனிவாசனை தோளை அழுத்தி உட்கார வைத்தார். இடுப்புக்குக் கீழே நழுவப்போன வேட்டியைக் கட்டாமலே பிடித்துக்கொண்டு, அந்த ஜாட்டைரக்டரைப் பார்த்து தமிழ் இனத்திற்கே உரிய புறநானூற்று பார்வையோடு கேட்டார். "சார். இந்த ஆறு வாரப் பயிற்சி எப்ப முடியும்.?” "ஒய் டவுட். அடுத்த மாதம் 31-ஆம் தேதியோட முடியும்." "ஆறு வாரமுன்னா. நாற்பத்திரண்டு நாள். அதனால, அடுத்த மாதம் 28-தேதியே முடிச்சுடுங்க சார்.” "நோ.நோ. 31-ஆம் தேதின்னா 31-ம் தேதிதான்." "நோ.நோ. 28-ஆம் தேதியேதான். 28-ஆம் தேதிதான்.”