பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போக்கிடம் இல்லாத பொழுது 13? "முப்பத்தி ஒண்ணு. ரைட்." "ராங். இருபத்தெட்டு.” அந்த அரச பயிற்சி நிலையத்தின் இயக்குநரான திவான்லால், பொறுமை இழந்தார். கத்தப் போனார். ராமையாவும் திருப்பி கத்துவதற்கு தயாராக இருப்பதுபோல் உதடுகளை குவித்தப்போது, திவான்லால் ஜென்டில்மேனாகி கேட்டார். "லுக் ஜென்டில்மேன்! மேற்கொண்டு ஒரு மூணு நாள் இருக்கக் கூடாதா? இங்கேதான் பொறுப்புணர்ச்சி வேணும் என்கிறது. அடிப்படையில் ஒவ்வொரு அரசு அலுவலருக்கும் பொறுப்புணர்வு வேண்டும். உங்ககிட்ட அது இல்ல.” "பொறுப்புணர்வு இருக்கிறதால தான் சொல்றேன். இருபத்தெட்டு இருபத்தெட்டே." இயக்குநர்திவான்லால், உதடுகளை உப்பவைத்தார். பயிற்சி மாணவ அதிகாரிகளும், வீம்புக்குப் பேசுவதுபோல் தோன்றிய ராமையாவை, அதிசயமாய்ப் பார்த்தார்கள். முன்னியும், சஞ்சயும் மட்டும், எதைப் பற்றியும் கவலைப்படாமல், லேசாய் ஒருவரை ஒருவர் உரசியபடியே எதையோ பேசிக் கொண்டிருந்தார்கள். கோபத்தால் கண் சிவந்து, குமுறலால் பற்கள் வெளிப்பட்டு, படபடப்பாய் நின்ற திவான்லாலைப் பார்த்து, ராமையா பேசப் போனபோது, திவான்லால் மீண்டும் கெஞ்சினார். “ஆறு வாரம் என்பது நீங்கள் சொல்வது மாதிரி டெக்னிக்கால சரியா இருக்கலாம். ஆனால், மேலும் மூன்று நாட்கள் நீங்கள் பயிற்சி பெற்றால், உங்கள் சகாக்களுக்கு, மேலும் சிறப்பாக, இங்கே கற்றதை கற்பிக்க முடியும். எத்தனையோ அதிகாரிகள் இருந்தும், உங்கள் அலுவலகம், உங்களைதான் நல்லவர், வல்லவர் என்று அனுப்பி இருக்க வேண்டும். இந்தச் சூழலில் மூன்று நாட்களை பற்றி நீங்க கவலப்படக் கூடாது.” 10