பக்கம்:தலைவன், வெள்ளியங்காட்டான்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36. பரவசம்


தன்னை மறந்தான்; தனைத்தெய்வ மாய்க்கொண்ட
பொன்னை மறந்தான்; புனைவொன்றி - மின்னைக்
கடிந்ததிடைக் காரிகையும் கண்மறையக் கண்டான்,
படிந்தமட மான்கள் பதிவு !

“தம்பியென் றால்தம்பி தான்; தம்பி கைத்திறனுக்
கம்புவியி வொப்பொன் றறியேநான் ; - நம்புங்கள்
மங்கைகளே! காண்க, கலை -மான்களெழில்; - மாக்கலைஞன்
செங்கைகளே பூண்க, சிறப்பு!”

“தம்பியகப் பாங்கு தமயனே பாராட்டற்
கம்புவியி லொப்பொன் றறியேன்நான் ,- நம்புங்கள் ;
நன்மான்கள் தந்தநம் நம்பிக்கோர் நங்கைதனைச்
சன்மானம் தந்தால் சரி! ”

என்னடி சொன்னாய் இளங்கிளியே ! ஏன்றிதனை
உன்னடீ ! உன்னி யுரையடீ !” என்னஅவள்
“காதல்நோய் சிற்பத்தில், காட்டுவான் கண்ணுக்கு
மாதல்ல தில்லை மருந்து ! ”

“கொலைஞர்கண் கோட்டம் கொடும்பகைமேல்; கடின்
வலைஞர்கண் ணோட்டம் வலைமேல் ! -கலைஞர்கண்
வைப்பு வனப்பின்மேல், வாயாடிப் பெண்ணின்கங்
வைப்பு வதுவை வரைத்து ! . .”

" 'சட்டியிலே அட்டதுதான் வட்டிலிலே இட்டதெனப்
பட்டியிலே வுள்வோர் பறையடித்தும்-'கெட்டதெ' வத்
தள்ளுவ ராயின், தவறாகும்; தாழாரால்
எள்ளவும் நேரு மிருந்து !

'முள்ளங்கி யொத்திருக்கும் முத்தங்கி' யென்பவர்க்
குள்ளதைச் சொன்னா லுடலெரிச்சல் கொள்ளு'மெனத்
தெள்ளத் தெளிந்தோர்சொல் தேரீர்; திகைத்தென்சொல்
தள்ளுவது சாலத் தவறு!.."

முத்தாள் முகஞ்சுழித்தும் மூவா முதல்கானி
யாத்தா ளெலச்சொற்களாள் வான்மேல்-கோத்தாளைக்
கண்டு சிரித்தவனைக் கண்டுசிரித் "தென்சொல்லில்
உண்டுண்மை" யென்றா துரத்து !

"உயிருடைய தென்ற வுணரிவூட்டும் சிற்பம்
'செயிருடைய' தென்றெவரும் செப்பார்; - துயரடையக்
காரணமே இல்லை; கருத்தி விருந்தகலாப்
பூரணமாயப் புல்லும் புகழ் !

கலையின் கவினுயிர்ப்பு கண்ணுறவே காட்டும்
நிலையில்நம் நெஞ்சம் நெகிழ்ந்தால் - அலையலையாய்
மக்களெல்லாம் வந்து மனமுவந்து கண்டுசெலத்
தக்கதெனச் சாற்றத் தகும் !

சிற்பமும், சித்திரமும், சிந்தை தனைக்கவரும்
கற்பனைக் காட்சிக் கவிதைகளும்-பொற்பொத்துக்
காலத்தை வென்று களிப்பிக்கும். நல்லகலை
மூலத்தை யொன்றி முடிந்து!"

குன்றாக் குணமுடைய கோமதியின் கற்றுவத்தி
லொன்றாயுற் றுண்மை யுனர்த்திடவே -நன்றோர்ந்த
பானுமதி சோமு பரவசமாய்ப் பாங்குபட
வானமுதே யாமில் வழக்கு!