பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மற்ருெருவனுடைய தோலிகுல் போர்த்துக் கொள் வதுபோலாம். அதல்ை ஒவ்வொரு நிமிஷமும் தோலுக்கும் எலும்புக்கும் தீராத சண்டையாகவே இருக்கும். எனக்கு ஜப்பானுடன் நெருங்கிப் பழகி அவளியல்பு யாது, அவளுடைய பலம் எதிலே யிருக்கிறது, அவளுக்கு விபத்துக்கள் எவையென் பவற்றையெல்லாம் ந | ஞ க நிச்சயப்படுத்திக் கொள்ள ஸந்தர்ப்பம் வாய்க்கவில்லை. நானும் கிழக்கைச் சேர்ந்தவளுகையாலே, அவளுடைய தற்கால விவகாரங்களையும், அவற்றை அவள் தீர்க் கும் வழிகளையும் நான் மிகவும் ஆவலுடன் கவனிக்க வேண்டியவளுகிறேன். இந்தப் பெரிய கிழக்கு ஜாதி நவீன காலத்தினிடம் பெற்ற லெளகர்ய்ங்களையும், பொறுப்புகளையும் என்ன செய்யப் போகிருளென் பதைப் பார்க்கும் பொருட்டாக உலக முழுதும் காத்திருக்கிறது. வெறுமே மேற்கை (ஐரோப்பாவை) அபிநயிப்பாளாஞல் அவளைக் குறித்து நாம் எதிர் பார்த்ததெல்லாம் வீனகிவிடும்.

மேற்கு நாகரிகம் பல ஸங்கடமான விவகாரங் களை உலகத்தின் முன்னே காட்டிற்று ; ஆனால் அவற் றைத் தீர்ப்புப் பண்ணும் நெறி காட்டவில்லை. ஆளுக்கும் அரசுக்கும் போராட்டம் ; தொழிலாளிக் கும் முதலாளிக்கும் சண்டை ; ஆணுக்கும் பெண் ணுக்கும் யுத்தம் , லெளகிக லாபத்துக்கும் ஆத்ம லாபத்துக்கும் யுத்தம் ; ஜாதிகளின் கூட்டஹங் காரத்துக்கும், மானுஷிக பரம தர்மங்களுக்கும் யுத்தம் : அங்ங்ணமே, வர்த்தகம், அரசு எனுமிவற் றின் பிரமாண்டமான கூட்டங்களிலே ஸஹஜமாக விளையக்கூடிய குரூபமான சிக்கல்களுக்கும், அழகை யும், பரிபூரண சாந்தியையும் விரும்புகிற மனுஷ்ய ஸ்வபாவத்திற்கும் யுத்தம் :-இத்தனை குழப்பங் களுக்கு ஸமாதானம் கண்டுபிடிக்க வேண்டும். இது