பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1Շն தாகூர்ன் ஐம்பெருங் கட்டுரைகள்

ஸார்யனுடைய செய்கையால் அங்ங்னம் காட்டின. நாட்டிலும், பாஷையிலும், சரித்திரத்திலும் வேறு பட்ட பல ஜாதியாராயினும் நாம் ஒருங்கே மனுஷ்ய ஜாதியின் பரம ஐக்யத்தையும், அன்பின் ஆழ்ந்த பந்தத்தையும் அங்கீகரித்தோம். சாந்தியும், தர்ம சிந்தையுமுடையதாய், மனிதர் பரமார்த்தங்களின் பொருட்டுக் காட்டில் கூடிய அந்தக் காலத்தில் உங்கள் ஜாதி அமரத் தைலம் கூட்டி வைத்தது. அதுகொண்டே உங்கள் ஜாதி புதிய யுகத்தில் மறுபடி பிறக்கவும், புதிய இளைய உடல் தரிக்கவும், உலகம் பார்த்தனவற்றுள்ளே பெரு வியப்பாகிய பெரும் புரட்சியின் இடிப்பிலே காயம் படாமல் பிழைக்கவும் ஹேது உண்டாயிற்று.

பழையதைப் புதியதாகவும், பலமற்றதை பல முடையதாகவும், அவமானத்தை மாட்சியுடைய வெற்றியாகவும் மாற்ற வேண்டுமானல், அதற்கு மனிதனிடத்தில் மறைந்து நிற்கும் தேவ சக்திதான் வந்து தீரவேண்டுமென்பதை நம்பாதிருத்தல் சிரமம். அந்த தேவ சக்தியானது உங்கள் நாட்டிலே, இந்த அற்ப லோப நாட்களில் பிறக்கவில்லை. கீச்சிடும் யந்திரங்களும், அஸாரத்தனமான அஹங்காரமும், ராஜ்ய தந்திரிகளின் பொய் முழக்கங்களும், செழிப் படைந்த கபடமும் தலையெடுத்திருக்கும் இந்த நாட் களில் அது பிறக்கவில்லை. வீர ஆண்மையின் உதய காலத்தில், வானம் மண்ண நெருங்கி வந்த காலத்தில், மனிதன் தனதாத்மாவின் ஜகத்தை ப்ரகாசப்படுத்திய பரமாத்மாவினிடத்திலும் நம் பிக்கை கொண்டிருந்த புராதன காலத்தில், அது பிறந்தது.

இந்த நாட்டில் என் மனதிலே அதிகமாகப் பதிந்த் விஷயம் யாதென்ருல், நீங்கள் இயற்கையின் மர்மங்களைப் பகுப்பு நெறியால் அறியாமல் அனு