பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இப்பாதுடைய ஜீவன் yr;

தாபத்தாவே தெரிந்தீர்களென்ற நம்பிக்கை இயற் கைத் தேவியின் கோடுகளிலுள்ள பாஷையையும், வர்ணங்களிலுள்ள ஸங்கீதத்தையும், கோணல்களி லுள்ள ஒழுங்கையும், விடுதலையுள்ள அசைவுகளிலே இன்னிசையையும் நீங்கள் கண்டீர்கள். அவள் தன் அபரிமிதமான வஸ்துக் கூட்டங்களை யாதொரு முட்டுதலுமின்றி நடத்திச் செல்லுகிருள். அவளு டைய படைப்புக்களில் சண்டைகள் கூடக் கூத்தும் பாட்டும் போலே கிளேக்கின்றன. அவளுடைய கிளர்ச்சியிலே கேவலம் பகட்டு மிகுதியன்று, தன்னை மறந்த லம்பூர்ணத்வம் காணப்படுகிறது.

இயற்கையானவள் தனது ஸ்ெளந்தர்ய ரூபங் களில் சக்தி சேர்த்து வைத்திருக்கிருள். இந்த அழகு தான் அவள் மார்பின்மீது கிடக்கும் பெரிய சக்தி களைத் தாய்போலே போஷிக்கிறது. வேகத்திலும், சாந்தியிலும் அவற்றைக் காப்பாற்றுகிறது. பரிபூர்ண ஸ்ெளந்தர்யத்தின் ஸங்கீதத்தினுல் பிரகிருதியின் சக்திகள் தம்மைத் தாமே அழிவின்றிக் காத்துக் கொள்ளுகின்றன. அவள் தனது கோணல் வரிகளின் மென்மையால், பூமியின் தசைகளிலுள்ள ஆயா ஸத்தை நீக்கிவிடுகிருள். இந்த விஷயங்களையெல்லாம் நீங்கள் அறிந்துகொண்டீர்கள். இந்த மர்மங்களை வாழ்க்கையிலே கலந்து கொண்டீர்களென்றும், எல்லாவற்றிலும் தோன்றும் அழகு உங்கள் மதிக் குள்ளே பாய்ந்து விட்டதென்றும் உணர்கிறேன்.

வஸ்துக்களைப் பற்றிய புற அறிவு விரைவிலே வந்துவிடும். அகத்தைக் காண்பதே பல நூற்ருண்டு பழகித் தன்னைக் கட்டிய பின்பு கைகூடும் விஷயம். புறத்தே நின்று இயற்கையை ஆளுதல் மிகவும் எளிது. அன்பின் கனியிலே அவளைத் தனதாக்கிக் கொள்ளுதல் அரிது. அதுவே உண்மையான மேதை யின் தொழில். உங்கள் ஜாதி அந்த மேதையைப்