பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்

வும் கருதப்பட்டன. எனவே எல்லையில்லாத போட்டியின் தாண்டுதலுக்குட்படாமல், தனித்தனி தனது பரிபூரணத் தன்மையைப் பரீகை செய்ய நேரமிருந்தது.

ஜனங்களுடைய பொதுவான தொழிலாளித் தனத்துக்கு ஜாதியென்று பெயர். அது ஜனங்க ளுக்குப் பெரிய விபத்தாய்க் கொண்டு வருகிறது. ஏனெனில் அதில் மிகுந்த லாபமுண்டாகிறது : எனவே உயர்ந்த ஆதர்லங்களின் நியதிகளிலே மனிதருக்குப் பொறுமையில்லாது போகிறது. லாபம் எவ்வளவு அதிகமாகிறதோ அவ்வளவு ஸ்வார்த்தம், பொருமை, விரோதம், இவற்றின் அல்லல் பலமடைகிறது. இவை மனிதர்களின் மனதில் லாபத்தால் விளைகின்றன. *

உயிருள்ள ஜனங்கள் ஜாதிகளாக இறுகுதல் மேன்மேலும் அவசியமாகிறது. ஜாதியக் கொள்கை யின் வளர்ச்சியால் மனிதனுக்கு மனிதன் பெரிய விபத்தாய் விட்டான். அக்கொள்கை தீராத பயத்தை விளைவிப்பதனுல், மேன்மேலும் பெரிய ஆபத்தாக மூண்டு வருகிறது.

கூட்டத்தின் புத்தி ஒரு குருட்டு சக்தி. நீராவி முதலிய பூத சக்திகளைப் போலவே அதையும் பிரமாண்டமான பலம் சேர்க்க உபயோகப்படுத்த லாம். ஆதலால் லோபத்தாலும் பயத்தாலும் தமது ஜனங்களை வலிமைக் கருவிகளாக்க விரும்பும் அரசர் இந்தக் கூட்டப் புத்தியைத் தமக்கு வேண் டிய வழியில் பயிற்சி செய்கிருர்கள். ஜனங்களுடைய மனதில் எங்கும் புடமும், ஸ்வ்ஜாதிக் கர்வமும்; பிற ஜாதிகளிடம் விரோதமும் வளர்த்தல் கடமை யென்று நினைக்கிரு.ர்கள். பத்திரிகைகளையும் பள்ளிக் கூடப் புஸ்தகங்களையும் கோயில் ஆராதனைகளேயுங் கூட இந்த நோக்கத்துக்குப் பயன்படுத்துகிருர்கள்.