பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ð$ தாகூர்ன் ஐம்பெருங் கட்டுரைகள்

SSASAS A SASAAASAAA S -

நாம் அனுபவத்தில் காண்பது யாதெனில் செல்வ மடைந்த ஜாதி யொவ்வொன்றும் பிறருக்குத் தீங்கு செய்யும் ஸ்வார்த்தச் செயல்களிலேதான் அதை யடைந்திருக்கிறது. அதாவது வியாபார வேட்டை களிஞலும், அந்நிய தேச உடைமைகளாலும், அல்லது இரண்டும் சேர்ந்ததாலும் என்க.

இந்த லெளகிகச் செல்வமிகுதி ஒயாமல் ஜனத் தின் ஸ்வார்த்த இயல்பைப் போஷிப்பதுமின்றி, ஒரு ஜாதிக்கு ஸ்வார்த்தம் (தன்னலம்) அவசியம், ஆதலால் அதுவே தர்மம் என்ற பாடத்தை மனிதரின் உள்ளத்தில் அழுந்தச் செய்கிறது. ஐரோப்பாவில் ஜாதி யெண்ன்த்தில் அழுத்தம் எப்போதும் வளர்ந்து செல்வதால் அது நேர்ச் செய்கையாலும், தொத்தும் திறத்தாலும் மனிதருக்குப் பெரிய விபத் தாய்க் கொண்டு வருகிறது.

மனுஷ்ய ஸ்வபாவத்திலேயே திமைகள் இருப்பது மெய்தான். நாம் தர்ம விதிகளே நம்பியிருத்தாலும் தன்னுட்சியில் பயிற்சி பெற்றிருந்தாலும் அவை நம்மையறியாமல் வெளியே கிளைத்து விடுகின்றன என்பதும் மெய்தான். ஆனுல் அவை தம் நெற்றிமீது பழிச்சூடு போட்டுக்கொண்டிருக்கின்றன. அவற்றின் வெற்றியே அவற்றின் கொடுர ரூபத்தை அதிக கோரமாகக் காட்டுகிறது. மனுஷ்ய சரித்திர முழுமை யிலும் துன்பப்படுவோர் சிலரும், படுத்துவோர் பிறரும் இருக்கவே செய்வார்கள். தி மை யை வெல்லுதல் எக்காலத்திலும் பரிபூர்ணமாக நிறை வேருது. தீ எரிவதுபோல் நமது நாகரிகத்தில் அது தொடர்ச்சியாக நடக்கும் செய்கையாம்.

நித்தியமான பரிபூரணத்வ லக்ஷயத்துக்கும்,

அதன் நிரந்தர ஸ்தானத்துக்கும் உள்ள பொருத் தமே ஸ்ருஷ்டி யென்று சொல்லப்படும். நன்மை