பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 4

காலத்தில் இந்த ஒட்டையை அடைக்காதிருந்தால் பின்பு பெரிய செலவு நேரும். இதை ப்ரிடிஷ் தந்திரிகள் அறிந்திருப்பதாகவே தோன்றுகிறது. அதனுல்தான் ஸ்வராஜ்யத்தைப் பற்றின வார்த்தை புறப்பட்டிருக்கிறது.

ஆளுல் மனித இயல்பில் தாழ்ந்த பகுதிக்குக் கண்ணில்லை. அது நிகழ் காலத்தை மாத்திரமே கவனிக்கும், வருங் காலத்தைக் கவனியாது. உண் மையையும், தர்மத்தையும் நம்பி வார்த்தை சொல்லு தல் ஆண்மையற்ற சித்த பலக்குறைவென்று கருதும். இது ப்ரிடிஷ் ராஜ்யத்துக்குப் பகை. உயர்ந்த ஆசைகளால் தூக்கிய இறகுகளையுடையவளாய் பாரததேவி இப்பகையைப் புறக்கணிக்கிருள். இங்குள்ள ஆங்கிலோ-இந்தியன் ஸர்க்கார் உத்யோ கஸ்தளுளுலும், வர்த்தகளுளுலும் தன் லாபத்தையும் அதிகாரத்தையும் விரும்புவோணுதலால், அவனுக்கு இவ்விடத்து நிலைமை கண் தெரியவில்லை. மிகவும் நெருக்கத்திலே கண் மங்கல் ஏற்படும். அவனுடைய குறுகிய பார்வையில் அவனதிகாரமே பெரிதாகவும், இங்குள்ள முப்பது கோடி மனிதரும், இவர்களுடைய சுக துக்கங்களும் துச்சமாகவும் தோன்றுகிறது. இதளுல் இந்தியாவின் ஆண்மையை உறுதி செய்யத் தகுந்த சீர்திருத்தம் இங்கிலாந்து நமக்குக் கொடுத் தாலும், அது இங்கு வருமுன் வெட்டுண்டு துண்டு துண்டாய் ரத்தமில்லாமல் வருமோ? அல்லது வரும் வழியிலே செத்துப் போமோ ? இந்தியாவின் விதி யாகிய பாலைவனப் பாதையிலே சிதறுண்டு கிடக்கும் பயனற்ற நல்லெண்ணங்களின் எலும்புகளுடனே இதன் எலும்புகளும் சேருமோ? என்று கருதி அஞ்சு கிறேன்.

நம்மைத் தடுக்கப் படைதரித்த ஆங்கிலோ-இந் தியன் அதிகார வெறியுடையவன். அதிகார மாமூல்