பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதிய நாயும் முதிய மனிதனும் it}}

இந்த வட்டாரத்திலேயே சரியாகப் பறவைகளைக் குறி வைக்கும் நிபுணர் யார் தெரியுமா ? ’’ என்றது. அவை வலது பக்கம் தான் போயின என்று நான் சொன்னேன். சரிதான். உன் இஷ்டம். நாம் போவோம்’ என்று லேண்டி சொன்னது.

பறவைகள் நேரே பறந்து போயிருக்கலாம் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. ஆனல் எந்த நாயும் என் கருத்தைக் கேட்கவில்லை.

லேண்டி மீண்டும் பிராங்குடன் கலந்து ஆலோசித்தது. பிறகு வேகமாக ஒடிப் போய், சதுப்பின் ஒரத்தில் கம்பீரமாகக் கவனித்து நின்றது. உயரமாய் நனைந்து ஊறிய, மஞ்சள் புல்களினூடே பிராங்க் உழுது சென்றது. ஒரு தடயம் கிட்டியதும் அது தன் இடுப்பை நாட்டியக்காரன் மாதிரி ஆட்டி அசைத்தது. பிறகு அசைவற்றுப் படுத்து விட்டது. லேண்டியின் மணி புல்லுக்கு அப்பால் தூரத்தில் ஒலித்ததை நான் கேட்க முடிந்தது. ஆகவே * நில்லு : ‘ என்று கத்தினேன். அது நின்றது.

பறவை மேலே வந்தது. பிராங்கின் முகத்துக்கு அருகே தான். இறகுச் சிதறல்களுக்கு மத்தியில் அதை அசைவற்றுக் கிடக்கும்படி செய்தேன் நான். எடுத்து வா ’’ என்றேன். பிராங்க் அலுத்துக் கொள்வது போல் தோன்றி, சிரிப்புக்கு ஆளாகாதே ’’ என்றது. சுற்றிச் சுழன்று மறுபடியும் அசையாது கிடந்தது. சிறிய பழுப்பு நிறப் பறவை குபீரென எழுந்தது. அதையும் நான் சுட்டேன். பிராங்க் மகிழ்வு பெற்றது. அது மேலும் சில அடிதுாரம் சென்று திரும்பவும் படுத்தது. இரண்டு பறவைகள்-பெட்டையும் சேவலும்-மேலே கிளம்பின. ஒன்றை வலது புறமாகவும், மற்றாென்றை இடது பக்கத்திலும் சுட்டேன். பிராங்க் திரும்பிப் பார்த்து, நகைத்தது. இது போதும். துப்பாக்கியைக் கழற்றி விடு, குழந்தாய். ஒரு பறவைக் கூட்டத்திலே ஐந்து சுட்டால் போதுமானது ‘ என்றது.

நான் துப்பாக்கியைக் கழற்றினேன். பணக்காரன் கூட சிறிது வேலை செய்யமுடியும் என்று லேண்டிக்கு பிராங்க் அறிக்கை செய்தது. நான் மீண்டும் லேண்டியின் மணியோசையைக் கேட்டேன். அது வாயில் ஒரு பறவையோடு வந்து சேர்ந்தது ; அதைத் தரையில் போட்டு விட்டு, உட்கார்ந்தது. பிராங்க் இரட்டைப் பறவைகளே எடுத்துவரச் சென்றது. உடனடியாகவே இரண்டையும் கவ்வி வந்து, ஜாக்கிரதையாக என் சட்டைக்குள் திணித்தது. - -

நாங்கள் சதுப்பைக் ஆந்து சென்றாேம். நான் என் சிறு துப்பாக்கியைச் சரிப்படுத்தின்ேன். பிராங்க், எனக்கு முன்னுல், சதுப்பின் விளிம்புகளை மோந்தபடியே, திரிந்தது. சட்டென்று, அது மோப்பம் பிடித்து விட்டது. உடனே லேண்டிக்குச் செய்தி அனுப்பியது. பிராங்க், தன் வாலே முன்னும் பின்னு மாக ஆட்டியவாறே, வட்டமிட்டுச் சுழன்ற இடத்துக்கு லேண்டி