பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

?3 தாத்தாவும் பேரனும்

போய், மறைப்பாக இருக்கும்படி நான் தயாரித்திருந்த ஒரு புதரில் பதுங்குவேன். முதல் மங்கல் ஒளி வந்ததும், குள்த் தில் வாத்துக்கள்-சில வெண்பந்துகள், நீல அலகுகள், சாம் பல் வாத்து, கறுப்பு மல்லார்ட் முதலியன-சேரும். - பார்ப்பதற்குப் போதுமான வெளிறிய ஒளி வந்த உட னேயே நான் என்ன செய்யப் போகிறேன் என்பது எனக்குத் தெரியும். நீரில் மிதக்கும் அவற்றை நோக்கி முதல் குண்டைச் சுடுவேன்; அவை பறக்கத் தொடங்கியதும் ஒரு வாத்தைக் குறி வைப்பேன். மேலும் நான்கு தடவைகள் நான் சுட முடியும். ஏனெனில் அவை காட்டிலேயே வட்டமிட்டு, மீண் டும் சில சிலவாய் வந்து நீரை அடையும். நல்ல காலை நேரம் ஒன்றில், நான்கு, ஐந்து, ஆறு வாத்துக்களே-விசேஷமாக நீர் மேலேயே இரண்டைச் சுட்டிருந்தால்-நான் பை சேர்க்க p-. -

ஆணுல் இந்தக் காலே வேளையில், நான் நீர் மீது ஒன்றே ஒன்று தான் சுட்டேன். காயம் பட்ட ஒன்று சிறகடித்து மேலெழுந்தது. அதைத் தேடிக் காட்டில் திரிவதைத் தடுப்ப தற்காக நான் மற்றாெரு குண்டால் அதை அடித்தேன். வாத் துக்கள் மீண்டும் முதல் முறையாகத் திரும்பி வந்தன. இன் லுமொன்றை நான் சுட்டேன். பறந்து சென்ற ஒன்றைத் திப்பவிட்டேன். பிறகு ஒரு புதிய கூட்டம் வந்தது. எனக்கு ர்ஷ்டம் இருந்தது. வந்த ஒன்றையும், போகும் ஒன்றை நான் அடித்தேன். முதல் வாத்தை அதன் தலையில் சுட்டேன். அது வானத்தில் சுமார் நூறு கெஜம் உயரம் ஆகாச வாணம்போல் சென்று, மக்கரெல் மீன்போல் செத்து நேரே வந்து விழுந்தது.

அருமை ; அது நேர்த்தியான துவக்கமே என்று, அது குளிர் நீரில் விழுந்தபோது, நான் மிக்கியிடம் சொன்னேன். ஒரு கறுப்பு மல்லார்ட், இரண்டு வெண்பந்துகள், ஒரு நீல அலகு, ஒரு சாம்பல் வாத்து ஆகியவை கிடைத்தன. இவ் வாத்துக்களை ஒரு மரத்தில் தொங்கவிட்ட பிறகு, அணில் நிலை. மையை ஆராயச் செல்வோம். கடைசி வாத்தை எ டு த் து வந்ததும், மிக்கி உடலே உலுக்கியபடி என்னை நோக்கியது. இது மிக அருமை, ஐயா! தண்ணீர் குளிர்ந்திருக்கிறது என்று கூறியது.

முரட்டு மரங்கள்-பெரும்பாலும் ஹிக்கரிதான் - நின்ற பெரிய இடத்துக்கும் எங்களுக்குமிடையே கொஞ்ச தூரம் தான் இருந்தது. நெடுநாட்களுக்கு முன்பு எவர்ோ ப்யிர் செய்தபோது முளைத்த காட்டு ஹிக்கரி மரங்கள் இங்கே நின்றன. அவற்றில் எப்பொழுதும் அணில்கள் கிடைக்கும். ஒக் காய்களும், பைன் பழங்களும் அகப்படுவதுதான் காரணம்: தாங்கள் மிக மெதுவாகவும் அமைதியாகவும் நடப்போம்.