பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழலோசை

ஆனல் நான் உயிரோடு இருக்கும் வரை அந்தப் பிராணியை மறக்க மாட்டேன். எனது தன்னம்பிக்கையில் பலத்த வடு ஏற்படுத்தி விட்டது. அது. அதற்குப் பிறகு அத்தகைய மனிதர் பலரை நான் சந்தித்திருக்கிறேன். அந்தப் பில்லியைப் போன்ற லட்சணங்கள் பெற்ற ஒரு நபரை, அல்லது சந்தர்ப்பத்தை, எதிர்ப்பட நேரும் போது, நான் விட்டுக்கொடுத்து மீன் பிடிக்கப் போய்விடுவேன். இதுவர்ை இந்தக் குணம் என்னேக் கைவிடவில்லை.

16 குழலோசை

கோடையின் ஆரம்பம் எப்பொழுதும் ஒரு சிறுவனுக்கு மன எழுச்சி தருவதாகும். வசந்ததாலக் காற்று மட்டுப்படுகிறது. ஏப்ரல் மழையை வெயில் போக்கிவிடுகிறது. பசுமை மெதுவாகத் தலை தூக்குகிறது. சகலவித வாசனைகளும் தொடங்குகின்றன. காலை ஆகாரத்துக்கு முந்திய விடியற்காலைகள் இனிய குளிர்ச்சி யோடும் மென்காற்றுடனும் விளங்குகின்றன. பனியில் நனைந்த புல்மீது வெறும் காலுடன் திரியவேணும் என்ற ஆசையையும், அமைதியற்ற கிளர்ச்சியையும் தருகின்றன.

வாசனைகள் குறிப்பிடத் தகுந்தவை. ஒடையின் அருகே நாய்ப்பல் வயலட் மலர்கள் பாசிக்கும் மேலாகக் கிளம்பின. மஞ்சள் மல்லிகையின் கனத்த நறுமணம் ஊர்ப்புறமெலாம் பரவியது. நாய்க்கட்டை மரங்கள் மென்மையான புஷ்பங்களோடு வெண்மையாகவும் இளஞ்சிவப்பாகவும் திகழ்ந்தன ; காட்டு வாசனைகளோடு தங்கள் சுகந்தத்தையும் கூட்டும் வகையில், பழத் தோட்டங்களில் பீச்களும், பிளம்களும் பூத்துக் குலுங்கின. அவற்றின் அடக்கமான முதல் பூக்கள் சூரிய ஒளியில் தலையாட்டி, காட்டு வயலட்டுகள், மேலே தாவும் ஜானி மலர்கள் முதலிய வற்றாேடு போட்டியிட்டன. சொர்க்கமும் இதே மாதிரித்தான்குளுமையாய், ஈரமாய், வெகு மதுர நறுமணத்தோடு-வாசனை பெற்றிருக்கும் என நான் எண்ணுவது உண்டு,

இக் காலத்தில் நாம் வேட்டையாளஞகவோ, மீனவகைவோ அல்லாமல், இயற்கைவாதியாகவே காட்டில் சஞ்சரிப்போம். அது பற்றித் தாத்தா உறுதியாக இருந்தார். -

பையன்கள் எல்லோரையும் போலவே நீயும் ரத்த வெறி பிடித்த கொடியனுக இருக்கிருப். ஆனல் கொல்லுவதைவிட வேறு பல விஷயங்களும் மிகுதியாக உள்ளன. கார்காலத்தின் நெடுந்துயிலுக்கும், கடுமையான வசந்த மழைக்கும் பிறகு,