பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழலோசை - .#89.

பறவைகள் சண்டையிட்டன. மக்னேலியா மரத்தில் வசித்த பெரிய, கொழுத்த, துடுக்கான, கிழட்டுப் பரிகாசப் பறவுை பூனப்பறவைக் கூச்சல்க் கேலிசெய்து கத்தும். தொல்ை துர்ரத்தி லிருந்து புருக்கள் சோகமாய்க் கூவின. பயிர் நிலத்தின் ஓரமாக உள்ள புதர் மறைப்பிலிருந்து காடைகள் கத்தின. அவை ஸ்ட்ராபெர்ரிச் செடிகளை நோக்கித் துணிச்சலோடு அணிவகுத்து வந்தன. கூட்டமாக அல்லாமல் ஜோடி ஜோடியாய், பின் தோட்டத்துக்குத் தாமே அதிபதி என்ற தோரணையோடு, அவை நக்-நஇன்.

கில்டீர் பறவைகள் நீர் தேங்கிய வயல்களின் மேலே வளைய மிட்டு, மேகங்களில் மூழ்கின. அவற்றின் கில்-டீ, கில்-டீ எனும் சோக ஒலி வானே நிரப்பியது. புற்றரை வானம்பாடிகள் வயல் களில் பாடின. சதுப்பு நிலங்களிலிருந்து காட்டுச் சேவலின் இனிய கானம் வந்தது. காகங்களும், ஜேப் பறவைகளும் எதற்கெடுத் தாலும்,- வசந்தத்தையும் சேர்த்துத்தான் - வீண் கூச்சல் கிளப்பின. நெடிதுயர்ந்த பைன் மரத்தில் எங்கோ பதுங்கி யிருந்து கத்தும் மழைக்காகத்தின் மந்தத் தொனியையும், மரங் கொத்திகளின் திடமான தாக்குதல்களையும், சிறு நீலப்பறவை களின் இனிய கீச்சொலிகளேயும் நாம் கேட்க முடிந்தது.

iையன்கள் இடைவேளை நேரத்தில் ஒடையில் ஆடையற்று நீந்தி மகிழ்வதற்காகப் பள்ளிக்கூடத்தை விட்டுப் பாய்ந்தோடும் காலம் இதுதான். அவர்கள் வகுப்புகளுக்கு மட்டம் போடுவது அசாத்தியமானதாகத் தோன்றும் காலமும் இதுவே. முற்றிலும் பழுக்காத பெர்ரிகளைத் தின்பதாலும், கல் போல் கடினமான பச்சை பீச் காய்களை ஆராய்வதன் மூலமும் வயிற்றுவலி ஏற்படும் காலமும் இதே. விளக்கெண்ணெயும் கலோமலும் தாராளமாய் பிரயோகிக்கப்படும் காலமும் இதுதான். பள்ளிக்கூடத்தில் பாடத்தில் கவனம் செலுத்துவது சாத்தியமற்றதாகவே தோன் றும். ஏனெனில், ஜூன் மாதத்தின் மயக்கம் தரும் மெல் லிரைச்சல் குன்றுக்கு அப்பால் வந்துவிட்டது. அதனல்தான், எச்சில் துப்பியதற்காகவும், காகித விமானம் வீசியதற்காகவும், பெண்களின் குட்டைத்தலேப் பின்னலே மைக்கூட்டினுள் தோய்த்த தற்காகவும் பையன்களை வகுப்பு நேரம் முடிந்த பிறகும் காத்து நிற்க வைக்கும் காலமாகவும் இது அமைந்தது. கோடை விடு முறை, மாணவர்களால் விரும்பப்பட்டதைவிட, அதிகமான ஆசையோடு ஆசிரியர்களால் எதிர்நோக்கப்பட்டது. மார்க்குகள் பயங்கரமாய் குறைந்தன. அராஜகத்தின் கரடுமுரடான விளிம் பிலே ஒழுக்கம் தள்ளாடி நின்றது. - வருஷத்தின் இந்தச் சம்யத்தில் உலகம் முழுவதும் சிறிது வெறியுற்று விளங்குமெனத் தான் எண்ணுவதாகத் தாத்தா சொன்னர், நான் கூர்ந்து கவனித்தால், காட்டினுள் வெகு தொலைவில், அரைவாசி ஆண் ஆடு ஆகிய பான் எனும் புராதனக்