பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் நாள்-முடிவு

அடுப்பினுள் இரைச்சலிட்டுப் பிரகாசித்தது. அது. மேஜைமீது குடி வகைகள் இருந்தன. எனக்கு ஒரு ஷெரி தருவதில் தாத்தா தயக்கம் காட்டவில்லை. அது பிரிஸ்டல் க்ரீம். நான் இரண்டு குடித்தேன். மூன்றாவதற்காக நான் கை நீட்டியபோது, அளவை மீறவேண்டாம், பையா. நீ ஒரே நாளில் பெரியவனுகிவிட முடியாது ‘ என்று தாத்தா அன்புடன் கூறினர். -

பால்டிமோருக்குத் திரும்பி, ஜான்ஸ் ஹாப்கின்ஸைக் கண்டு தாத்தாவுக்கு என்ன கோளாறு என்று அவர் ஏற்கனவே அறிந்து வைத்திருந்த ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்வதற்கு முந்தி, நாங்கள் கழித்த ஒரு வாரமும் வசீகரமானதாகும். டாக்டரின் அறிக்கையைப் பெற்றதும். நாங்கள் வீடுநோக்கிப் பிரயாணம் செய்தோம். வழி நெடுக, தாத்தா மெளனமாகவே இருந்தார்.

ஜேக்கியின் ஓடை என்று பெயர் பெற்ற ஒரு இடத்தை அடைந்ததும்-முன்பு நாங்கள் அங்கு வான் கோழிகளைக் கண் டோம் ; காடைகளைச் சுட்டோம்- காரை நிறுத்து. தான் அதைப் பார்க்க வேண்டும் ‘ என்று தாத்தா சொன்ஞர்.

நாங்கள் அவன் ஓடையை, அதன் பிறகு மூர் ஓடையை அடைந்த போதும், அவர் அ ைதயே சொன்னர், நாங்கள் நின்றாேம். பார்த்தோம். தாத்தா தலையை ஆட்டினர். எனக் குப் புரியாத ஏதோ காரணத்துக்காக, அவர் சொன் ஞர் : எனக்கு திருப்தியே. ஒருவரும் எனக்கு ஒன்றும் தரவேண்டிய a +. * 3 தி வீட்டைச் சுற்றி நின்ற பசிய ஒக் மரங்களின் முன்னுல் நாங்கள் காரை நிறுத்தினேம். பரிகாசப் பறவை வசித்த மக்ளுே வியா மரத்தை தாத்தா பார்த்தார்.

- இது நிலைத்திருக்கும். இது மிக உறுதியான மரம் : என்றார்.

நாங்கள் பத்திரமாக வீடு சேர்த்ததற்காக தாராளமான வாழ்த்துக்கள் பெற்றாேம். பிறகு தாத்தா, ‘ நாம் சிறு உலா பேர்வோம். பெண்களின் பரபரப்பு அதற்குள் தணிந்துவிடும். நான் உன்னிடம் ஒன்றிரண்டு விஷயங்கள் சொல்ல வேண்டும்’ என்றார். * ... “...”

படகோட்டிகளின் அலுவலகத்தை அடுத்துள்ள விடார் பெஞ்சை நோக்கி நாங்கள் மெதுவாக நடந்தோம். நான் திருடிய க்ரீம் மிட்டாய்களை அங்கே தின்பது வழக்கம். சூடான தேநீரில் மிக இனிப்பான இறுகிய பாலேக் கலந்து குடிப்பேன். நாங்கள் பெஞ்சுமீது சிரமத்தோடு அமர்ந்தோம். ஏனெனில் பலகை முழு வதும் ஒவ்வொருவர் பெயரும் கத்தியால் கரடு முரடாகச் செதுக் கப்பட்டிருந்தது.

நான்சாகப் போகிறேன் என்று உனக்குச் சொல்லமாட் டேன். அதை நீயே அறிவாய். எனது சிறப்பை எல்லாம் நீ பகிர்ந்து கொண்டாய். இனிமேல் நீ உன் சொந்தப் பொறுப்பில்